சேட்டு கடையில் பலே மோசடி.. 2 மாதமாக கிலோ கணக்கில் நகை திருடிய கும்பல்.. அதிரடி கைது
சென்னையில் 1 கிலோ நகைகளை கொள்ளையடித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
Recommended Video

சென்னை: வேலை பார்த்து வந்த நகைக்கடையிலேயே, கிலோ கணக்கில் நகைகளை திருடிய 2 ஊழியர்களை பாண்டிபஜார் போலீசார் கைது செய்துள்ளனர்.
தி.நகர் சென்னையின் முக்கியமான வணிக பகுதி. இங்கு ஏராளமான நகைக்கடைகள், பாத்திரக் கடைகள், துணிக்கடைகள் உள்ளன. இதனால் சென்னை மட்டுமல்லாது, வெளிமாநிலங்களிலிருந்தும் வியாபாரிகளும் பொதுமக்களும் வந்து செல்வர். பாண்டிபஜாரின் பெரும்பாலான கடைகளில் சிசிடிவி கேமரா, ரோந்து போலீசார் பாதுகாப்பு பணிகளுக்காக ஈடுபட்டுள்ளனர். என்றாலும் கொள்ளை, வழிப்பறிகள் தொடர்ந்து நடந்து கொண்டுதான்இருக்கிறது. இன்றும்கூட நகை ஒன்றில் கிலோ கணக்கில் தங்கம் மாயமாகி உள்ளது.

ஜிஎன் செட்டி ரோட்டில் உள்ளது ஜேஜே டைமண்ட்ஸ் என்ற நகைக்கடை. இதன் உரிமையாளர் ஷர்னிக் நாகர் என்பவர். இவர் கடந்த 2 மாதங்களின் நகைகள் இருப்பு குறித்து இன்று காலை கணக்கெடுப்பு நடத்த ஆரம்பித்தார். அப்போது 1 கிலோ 300 கிராம் எடையுள்ள தங்க நகைகள் குறைவதை கண்டு திடுக்கிட்டார். இதனால் உடனடியாக பாண்டிபஜார் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
அத்துடன், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தன்னிடம் வேலைக்கு சேர்ந்த நிர்மல், நிதிஷ் ஆகிய 2 பேர் மீது சந்தேகம் இருப்பதாகவும் போலீசாரிடம் தெரிவித்தார். இதனால் போலீசார் வேலை பார்க்கும் நபர்களிடம் விசாரணையை நடத்தினர். அப்போது, 11 நெக்லஸ்கள், 9 கம்மல்கள், 1 செயினை தாங்கள்தான் திருடியதாக ஒப்புக் கொண்டனர். இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்துள்ளதுடன், திருடிய நகைகளை மீட்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications