பிறந்த நாளன்று சோகம்.. வாளி தண்ணீரில் மூழ்கி ஒரு வயது குழந்தை பரிதாப பலி
பிறந்த நாளன்று வாளி தண்ணீரில் மூழ்கி ஒரு வயது குழந்தை பரிதாப உயிரிழந்தது.
சென்னை: சென்னை அடுத்த பெரவள்ளூரில் வாளி தண்ணீரில் மூழ்கி ஒரு வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை, பெரவள்ளூர் சக்கரபாணி தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் முரளி. இவர் எலக்ட்ரீஷியனாக வேலை செய்து வருகிறார். முரளியின் மனைவி நித்யா. இந்தத் தம்பதிக்கு நிகிதா (4), ரோகன் (1) என இரு குழந்தைகள் உள்ளனர்.

ரோகனுக்கு செவ்வாய்க்கிழமை முதலாவது பிறந்த நாளாகும். இதையொட்டி, அவனது பிறந்த நாளை அங்குள்ள திருமண மண்டபத்தில் சிறப்பாகக் கொண்டாடுவதற்கு முரளி குடும்பத்தினர் ஏற்பாடு செய்தனர். இதற்காக உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருக்கு அவர்கள் அழைப்பு விடுத்திருந்தனர்.
குழந்தை ரோகனின் பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கான வேலையில் செவ்வாய்க்கிழமை நண்பகல் முரளி குடும்பத்தினர் அனைவரும் கவனம் செலுத்தினர். விளையாடிக் கொண்டிருந்த ரோகனை யாரும் கவனிக்கவில்லை. இதனிடையே ரோகன், அங்குள்ள குளியலறைக்குச் சென்றான். அங்கு பாதியளவு தண்ணீருடன் இருந்த வாளியை ரோகன் எட்டிப் பார்த்ததாக தெரிகிறது. இதில் திடீரென அந்த வாளிக்குள் ரோகன் தவறி விழுந்து மூழ்கினான்.
சிறிது நேரத்துக்குப் பின்னர், முரளி குடும்பத்தினர் ரோகனை தேடினர். அப்போது ரோகன், குளியலறையில் உள்ள வாளியில் விழுந்து தண்ணீரில் மூழ்கி மூச்சுத் திணறி கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே ரோகனை மீட்டு அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அங்கு அவனை பரிசோதித்த மருத்துவர்கள், ரோகன் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இது குறித்து தகவலறிந்த செம்பியம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து குழந்தையின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிறந்த நாள் கொண்டாடப்பட இருந்த ஒரு வயது குழந்தை நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications