நாகை அருகே கடத்திவரப்பட்ட 10 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

நாகை: நாகை அருகே கடத்தி வரப்பட்ட 10 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு ரூ.3 கோடியாகும்.

நாகை அருகே காரில் தங்க கட்டிகளை கடத்தி வருவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் காரைக்கால் சோதனை சாவடி அருகே காரை மடக்கி பிடித்தனர்.

10 Kg Goldbars seized in Nagai

அப்போது அதில் சோதனை செய்ததில் சுமார் 10 கிலோ எடை கொண்ட தங்க கட்டிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மகாலிங்கம் , ஒரு பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் நாகை சுங்கத்துறை அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.மேலும் இலங்கையில் இருந்து படகு மூலம் தங்க கட்டிகள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. தங்க கட்டிகள் கடத்தலுக்காக பயன்படுத்தப்பட்ட கார் பறிமுதல் செய்யப்பட்டது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
10 kgs gold bars seized in Karaikkal check post, Police arrested 3 in connection with this. Car also seized.
Please Wait while comments are loading...