‘கருப்பு’ டிரெய்லரில் சிவகார்த்திகேயன் கலாய்ப்பு..! அந்த துப்பாக்கிக்கு எத்தனை பிரச்சனை!
சென்னை: சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'கருப்பு' படம், தற்போது தமிழ் சினிமாவில் அதிகமாக பேசப்படும் படங்களில் ஒன்றாக மாறியுள்ளது. ஆர்.ஜே. பாலாஜி இயக்கியுள்ள இந்த படத்தில் திரிஷா, நட்டி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரெய்லர் தாமதமாக வெளியானாலும், வெளியான சில நிமிடங்களிலேயே சமூக வலைதளங்களில் டிரெண்டாக ஆரம்பித்தது.

கருப்பு பட ட்ரெய்லர்
டிரெய்லரை பார்க்கையில், இது ஒரு சாதாரண கமர்ஷியல் படம் இல்லாமல், அதிரடி, அரசியல் பின்னணி, சமூக கருத்துகள் கலந்த ஒரு கதையாக இருக்கும் என்று தெரிகிறது. குறிப்பாக சூர்யா இந்த படத்தில் மிகவும் சீரியஸான, தீவிரமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பது ரசிகர்களுக்கு புதுமையான அனுபவமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆர் ஜே பாலாஜி வில்லன்
இப்படத்தில் ஆர்.ஜே. பாலாஜி வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பது பெரிய சர்ப்ரைஸாக அமைந்துள்ளது. பொதுவாக நகைச்சுவை மற்றும் லைட் ரோல்களில் நடித்துக் கொண்டிருக்கும் அவர், இந்த படத்தில் முழுக்க மாறுபட்ட முகத்துடன் வருவது டிரெய்லரிலேயே தெளிவாக தெரிகிறது. இதனால் கதையில் ஹீரோ-வில்லன் மோதல் மிக ஸ்ட்ராங்காக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திரிஷா நடிப்பு
திரிஷா இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாகவும், கதையின் எமோஷனல் சார்ந்த பகுதிகளில் அவர் பங்கு இருக்கும் என்றும் கூறப்படுகிறது. சூர்யா - திரிஷா கூட்டணி நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இணைந்திருப்பது ரசிகர்களுக்கு கூடுதல் ஈர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இசை, பின்னணி இசை மற்றும் ஒளிப்பதிவு ஆகியவை டிரெய்லரில் கவனத்தை ஈர்த்த முக்கிய அம்சங்களாகும். குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளின் மெருகூட்டப்பட்ட மேக்கிங், படத்தின் தரத்தை உயர்த்தும் வகையில் இருக்கும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
கலாய்ப்பு டயலாக்
இதற்கிடையில், டிரெய்லரில் இடம்பெற்ற ஒரு டயலாக் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. நடிகை தீபா சங்கர், "தம்பி பி.கே கையில் துப்பாக்கி கிடைத்தா யாருன்னு பார்க்காம நீட்டிடுவியா?" என்று கேட்கும் காட்சி, நடிகர் சிவகார்த்திகேயனை ட்ரோல் செய்வது போல இருக்கிறது என சிலர் கூறி வருகின்றனர். இதனால் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் இடையே விவாதம் சூடுபிடித்துள்ளது.
சிலர் இதை தேவையில்லாமல் பெரிதாக்க வேண்டாம் என்றும், இது கதைக்கு தேவையான ஒரு வசனம் மட்டுமே என்றும் கூறி வருகிறார்கள். அதே சமயம், மற்றொரு தரப்பு ரசிகர்கள் இந்த மாதிரியான வசனங்கள் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்று விமர்சிக்கின்றனர்.

தற்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருக்கும் விஜய் நடித்த கோட் திரைப்படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் விஜய் சிவகார்த்திகேயனிடம் துப்பாக்கியை பிடிங்க சிவா என்று கொடுத்துவிட்டு போவது போல ஒரு காட்சி இருக்கும். அப்போது சிவகார்த்திகேயன் நீங்க ஒரு முக்கியமான வேலையாக போறீங்க.. அந்த வேலைய பாருங்க இனி நான் இதை பார்த்துக்கிறேன் என்று ஒரு டயலாக் பேசுவார்.
அதனால் விஜய் அரசியலுக்கு போய்விட்டால் அடுத்த அவருடைய இடத்தில் சிவகார்த்திகேயன் தான் என்று பேச்சு எழுந்தது. ஆனால் கடந்த வருடம் பொங்கலுக்கு விஜயின் ஜனநாயகன் படத்துடன் சிவகார்த்திகேயனின் பராசக்தி படமும் மோதுவதாக இருந்தது. இதனால் விஜய்யின் ரசிகர்கள் சிவகார்த்திகேயன் துப்பாக்கியை வாங்கிவிட்டு அதை விஜய்க்கு எதிராகவே திருப்பி விட்டார் என்று அவரை திட்டி தீர்த்து வந்தனர். இப்ப வரைக்கும் பலர் சிவகார்த்திகேயனை திட்டிக் கொண்டிருப்பதையும் பார்க்க முடிகிறது. அதை வைத்து தான் இப்போ இந்த படத்தில் இந்த டயலாக் வைத்திருக்கிறாரா? என்ற கேள்விகளும் எழுந்து வருகிறது.
எதிர்பார்ப்பு
இந்த எல்லா சர்ச்சைகளையும் தாண்டி, 'கருப்பு' படம் ரிலீஸுக்கு முன்பே பெரிய ஹைப் உருவாக்கியுள்ளது. கதைக்களம், நடிப்பு, தொழில்நுட்ப தரம் ஆகியவற்றின் அடிப்படையில், இந்த படம் சூர்யாவின் கேரியரில் ஒரு முக்கியமான படமாக அமைய வாய்ப்பு உள்ளது என சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.
மொத்தத்தில், டிரெய்லர் மூலம் எதிர்பார்ப்பை உச்சிக்குக் கொண்டு சென்றுள்ள 'கருப்பு', வெளியான பிறகு அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா என்பதே தற்போது ரசிகர்கள் காத்திருக்கும் பெரிய கேள்வியாக உள்ளது.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications