மணப்பாடில் மேலும் 10 திமிங்கிலங்கள் உயிரிழப்பு - காரணம் தெரியாமல் தடுமாறும் மீன்வளத்துறை
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே மணப்பாடில் கரை ஒதுங்கிய திமிங்கிலங்களில் 36 நேற்று மீண்டும் கடலில் விடப்பட்ட நிலையில், இன்று மேலும் 10 சிறிய வகை திமிங்கிலங்கள் உயிரிழந்து கரை ஒதுங்கின. நேற்று உயிரிழந்த 45 திமிங்கிலங்கள் கடற்கரையிலேயே புதைக்கப்பட்டன.

தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு அருகே 81 திமிங்கிலங்கள் கரை ஒதுங்கிய நிலையில் அவற்றில் 45 திமிங்கிலங்கள் உயிரிழந்துள்ளன. பொதுவாக ஆழ்கடலில் தெளிவான தண்ணீர் உள்ள பகுதியில் மட்டுமே காணப்படும் திமிங்கிலங்கள் நேற்றிரவு மணப்பாடு கடற்கரையோரம் ஒதுங்கின.

இதனிடையே, கரை ஒதுங்கிய திமிங்கிலங்களை மீட்டு மீண்டும் கடலில் விடும் முயற்சி தீவிரப்படுத்தப்பட்டது. வனத்துறையினர், காவல்துறை, மாவட்ட நிர்வாகம் மற்றும் பெருமளவிலான மீனவர்கள் இந்த பணியில் ஈடுபட்டனர். இதில் பல மணிநேர முயற்சிகளுக்குப் பிறகு 36 திமிங்கிலங்கள் மீண்டும் கடலில் விடப்பட்டன. 45 திமிங்கிலங்கள் பரிதாபமாக உயிரிழந்தன.

இறந்த திமிங்கலங்கள் கடற்பரப்பில் மணலைத் தோண்டி புதைக்கப்பட்டுள்ளது. திமிங்கிலங்கள் கரை ஒதுங்கியதற்கான காரணங்கள் குறித்து அறிய உடற்கூறு பரிசோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில் பெரும்பாலானவை கடலில் விடப்பட்ட நிலையில் மீண்டும் 10 திமிங்கிலங்கள் இன்று கரை ஒதுங்கியுள்ளன. கழிவுகளால் கடல் மாசுபடுவதும் திமிங்கலங்களின் உயிரிழப்புக்கு முக்கிய காரணம் என அப்பகுதி மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications