Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரஜ்னீஷ், சந்திராசுவாமி, சங்கராச்சாரியார், பிரேமானந்தா, நித்தியானந்தா.. ராம்பால் .. சர்ச்சை சாமியார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மக்களுக்கு நன்மை செய்கிறோம்; கடவுளின் அவதாரங்களாக தங்களை அழைத்துக் கொள்ளும் பல சாமியார்கள் சர்ச்சைகளின் சங்கமமாகத்தான் இருக்கின்றனர். ரஜ்னீஷ், சந்திராசுவாமி, சங்கராச்சாரியார் என பல பிரபல சாமியார்கள் கொலை, கொலை முயற்சி, பலாத்கார வழக்குகளில் சிக்கி சிறைவாசம் அனுபவித்தவர்களாகத்தான் இருக்கின்றனர்.

இங்கே சில சர்ச்சை சாமியார்களைப் பற்றி பார்க்கலாம்

ரஜ்னீஷ்

ரஜ்னீஷ்

சீனியர் சாமியாராக வலம் வந்த ரஜ்னீஷ் சர்ச்சைகளில் சங்கமம்.. போதைப் பொருள் கடத்தல், பாலியல் குற்றச்சாட்டுகள் என அனைத்திலும் சிக்கியவர் ரஜ்னீஷ்.

சந்திராசாமி

சந்திராசாமி

அரசியல் தரகர் இவர். போபர்ஸ் பீரங்கி பேர ஊழல், ராஜிவ் கொலை என்பதோடு அல்லாமல் அன்னிய செலாவணி மோசடி தொடர்பாக 13 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

ஜெயேந்திர சரஸ்வதி

ஜெயேந்திர சரஸ்வதி

காஞ்சி சங்கராச்சாரியான ஜெயேந்திரர், சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயிலுக்குப் போனவர். கொலை முயற்சி வழக்கும் உண்டு. பிரபல எழுத்தாளர் அனுராதா ரமணன், சங்கராச்சாரியார் மீது பலாத்கார புகார் கூறியவர்.

ராம்பால்

ராம்பால்

ஹரியானாவைச் சேர்ந்த ராம்பால் கொலை வழக்கில் குற்றவாளி. மற்றொரு கொலை முயற்சி வழக்கில் சேர்க்கப்பட்டிருக்கிறார். 2010ஆம் ஆண்டு முதல் கொலை வழக்கில் 42 முறை ஆஜாராகாமலேயே தப்பித்து வருகிறவர். இப்போது நீதிமன்ற அவமதிப்பு வழக்கையும் சேர்த்து எதிர்கொண்டிருக்கிறார்,, இவரை கைது செய்தாக வேண்டும் என்று ஹரியானா- பஞ்சாப் உயர்நீதிமன்றம் கொதித்துக் கொண்டிருக்கிறது. இதற்காக ரிசர்வ் போலீஸெல்லாம் கூட குவிக்கப்பட்டுள்ளது.

ஆசாராம் பாபு

ஆசாராம் பாபு

இந்தியா, வெளிநாடுகளில் மொத்தம் 425 ஆசிரமங்களை நடத்தி வருகிறவர். 50 குருகுலங்களையும் நடத்துகிறார். இவரது ஆசிரமம் ஒன்றில் 16 வயது சிறுமியை பலாத்காரம் செய்தது, 700 ஏக்கர் நிலம் அபகரிப்பு ஆகிய வழக்குகளில் சிறையில் இருக்கிறார். இவர் மீதும் இவரது மகன் மீதும் 2 சிறுவர்கள் மர்மமாக இறந்தது குறித்த வழக்கும் நிலுவையில் இருக்கிறது,

சுவாமி சதாச்சாரி

சுவாமி சதாச்சாரி

இவர் திருச்சிக்காரர்தான்.. 15 நாடுகளில் ஆசிரமம் அமைத்திருந்தவர்.. 13 பெண்களை பலாத்காரம் செய்தவர். கொலை வழக்கும் உண்டு.

பிரேமானந்தா

பிரேமானந்தா

இலங்கைத் தமிழரான பிரேமானந்தா இவர் மீது பலாத்கார வழக்குகள் இருந்தன. இவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட சிறையிலேயே காலமானார்.

நித்தியானந்தா

நித்தியானந்தா

படுக்கை அறையில் நித்தியானந்தாவும் நடிகை ரஞ்சிதாவும் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் சன் டிவியில் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பு கிளம்பியது. அதன் பின்னர் மதுரை ஆதீனத்துக்கு இளைய ஆதீனமாக போய் அங்கும் சர்ச்சையாகிப் போனது. நித்தியானந்தா போகும் இடமெல்லாம் சர்ச்சைதான்.

பாபா குர்மீத் ராம் ரஹீம் சிங்

பாபா குர்மீத் ராம் ரஹீம் சிங்

இவரும் கொலை, கொள்ளை வழக்குகள் மட்டுமின்றி சாமியார்களுக்கே உரித்தான பலாத்கார வழக்கில் சிக்கியிருப்பவர்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+