• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வக்கிரமும், அரக்கத்தனமும், கொடூரமும் நிறைந்த கோர முகங்கள்.. நெஞ்சைப் பதற வைக்கும் செய்தி!

|

கும்பகோணம்: ஒரு செய்தியை பகிர்ந்து கொள்ளவே நெஞ்சு பதறுகிறது என்றால் அது இந்த செய்திதான். எப்படி ஆரம்பித்து எப்படி சொல்லி முடிப்பது என தெரியாமல் குலை நடுங்குகிறது என்றால் அது இந்த செய்தியால்தான். கேட்க, கேட்க நெஞ்சு வெடித்து கண்களில் ரத்தக்கண்ணீர் வருகிறது என்றால் அதுவும் இந்த செய்தியால்தான். வக்கிரமும், அரக்கத்தனமும், கொடூரமும் நிறைந்த இரண்டு கோர முகங்களை இந்த சமுதாயம் அறிய வேண்டியுள்ளதால் இதை பகிர வேண்டிய அவசியம் உள்ளது. படியுங்கள் வாசகர்களே...

கும்பகோணத்தை சேர்ந்தவர் ஆயிஷா. கணவனை இழந்த இவருக்கு 2 பெண் குழந்தைகளை வளர்க்க முடியவில்லையாம். அதனால் தன்னுடைய மூத்த மகள் பாத்திமா (பெயர் மாற்றப்பட்டுள்ளது)வை அதே பகுதியில் உள்ள மெகராஜ் பானு, நசீர் என்ற தம்பதியிடமும், இளைய மகளை வேறு ஒருவரிடமும் கொடுத்து விட்டு எங்கேயோ சென்று விட்டாராம். இந்த மெகராஜ்பானு-நசீர் தம்பதியோ, 10 வயது பாத்திமாவை பல வகைகளில், பல நேரங்களில், பல வடிவங்களில், கொடுமைகளை செய்ய துவங்கியுள்ளனர்.

சதை பிய்ந்து கொட்டும் ரத்தம்

சதை பிய்ந்து கொட்டும் ரத்தம்

கொடுமை என்றால் சாதாரணமாக நினைத்து விடாதீர்கள். புராணங்களிலும் இதிகாசங்களிலும் வரும் அரக்கர்கள் கூட செய்ய துணியாத கொடுமைகள் அவை. கத்தரிக்கோலால் அவளது உடலை கிழித்திருக்கிறார்கள் - அரிவாளால் தலை மற்றும் உடலில் கொத்தி கொத்தி எடுத்திருக்கிறார்கள்- பழுத்த பிரம்பினை கொண்டு உடம்பெல்லாம் ரத்தம் சொட்ட சதை பிய்ந்து தொங்கும்வரை அடித்திருக்கிறர்கள், இதுபோதாதென்று இருவரும் அவளை விரல் நகங்களால் கிள்ளி கிள்ளி எடுத்திருக்கிறார்கள். தினமும் இதே வாடிக்கையாக இருந்திருக்கிறது. கடந்த 25-ம் தேதியும் இதே கொடுமை அரங்கேறியிருக்கிறது.

மீட்கப்பட்ட சிறுமி

மீட்கப்பட்ட சிறுமி

அதுவும் அரிவாளால் கொத்தி. ஏற்கனவே ஆறாத ரணங்களில் மேலும் கொத்த, வலியால் சிறுமி அலறி துடித்திருக்கிறாள். ரத்தம் மண்டையை பிளந்து ஊற்றி கொண்டிருக்கிறது. பின்னர் தம்பதி அசந்த நேரம் பார்த்து சாலையில் ஓடிவருகிறாள். சாலையில் நடந்து சென்ற ஒருவர் சிறுமியின் கோலத்தை கண்டு துடித்து மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்துக்கு தகவல் கொடுத்துள்ளார். விரைந்து வந்த அவர்கள் சிறுமியை மீட்டு உடனடியாக முதலுதவி சிகிச்சை செய்து குழந்தைகள் காப்பகத்தில் தங்க வைத்துள்ளனர் அந்த நல்ல உள்ளம் படைத்தவர்கள்.

ரணம்-கொப்புளம்-காயம்

ரணம்-கொப்புளம்-காயம்

இவ்வளவையும் தாங்கி கொண்டது அந்த 10 வயது பிஞ்சு. எவ்வளவு நாள் தெரியுமா? 2 வருடங்கள். அவளுக்கு ஏன் என்று கேட்க நாதியில்லை. குறைகளை சொல்ல உறவில்லை. வலிகளை தாங்க வலுவில்லை. எண்ணிக்கையற்ற காயங்கள், வடுக்கள், தழும்புகள், கொப்புளங்கள், ரணங்கள் - என உச்சந்தலை முதல் பாதம் வரை நிறைந்திருக்கிறது. ஏன் சிறுமியின் பிறப்புறுப்பைகூட விட்டு வைக்காமல் தாக்கியிருக்கிறார்கள் அந்த சைக்கோ அரக்கர்கள்.

இவ்வளுவு கெட்டித்த இதயமா?

இவ்வளுவு கெட்டித்த இதயமா?

இந்த தம்பதி மீதும் சமீபத்தில் புகார் அளிக்கப்பட்டு வழக்கும் பதிவு செய்யப்பட்டதாம். ஆனால் அவர்கள் கைது செய்யப்படவில்லை. அத்துடன் இருவரும் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றுவிட்டு தற்போது நிம்மதியாக இருக்கிறார்கள். போதாக்குறைக்கு அந்த சிறுமி வீட்டைவிட்டு ஓடும்போது நகைகளை திருடி கொண்டு ஓடிவிட்டதாக போலீஸில் வேறு புகாரும் அளித்திருக்கிறார்கள். மனிதனின் இதயம் இவ்வளவு கெட்டித்து போகுமா? பண்புக்கூறுகள் இவ்வளவு பாழ்பட்டு கிடக்குமா?

ஒடுக்க ஒன்று திரள வேண்டும்

ஒடுக்க ஒன்று திரள வேண்டும்

ஆனால் மாபாதகத்தில் முக்கிய பங்கு, இருவருக்கும் ஜாமீன் வாங்கி கொடுத்த புண்ணியவான் வக்கீலுக்குதான் போய் சேரும். வளைக்கப்படும் நீதிகளால் பல உயிர்கள் நசுக்கப்படுகின்றன. ஜனநாயகத்தை காக்கும் நீதியரசர்கள் இந்த வழக்கினை பொதுநலவழக்காக எடுத்து விசாரித்து அந்த தம்பதிக்கு உரிய தண்டனை வழங்கினால், 10 வயது சிறுமி பட்ட எண்ணற்ற ரணங்களுக்கு ஓரளவு மருந்தாக அமையும். சிம்புபின் பீப் பாடல் முதல் எஸ்.வி.சேகர் போன்ற விவகாரங்களுக்கெல்லாம் குரல் கொடுத்த, மாதர் சங்க அமைப்புகள், இதுபோன்ற விசித்திர வெறியாட்டம் ஆடிய இந்த மனித மிருகங்களை ஒடுக்கவும் திரண்டு வந்து நியாயம் கேட்க வேண்டும்.

நூறுமுறை தூக்கிலிட வேண்டும்

நூறுமுறை தூக்கிலிட வேண்டும்

புத்தரும், வள்ளலாரும் வாழ்ந்த புண்ணிய பூமியில், இதுபோன்ற வன்முறைகள் தாண்டவமாடுவது நாட்டின் ஜனநாயக அமைப்புக்கு ஏற்பட்ட மிகப்பெரிய வெட்கக் கேடு. இந்த அரக்க மனம் படைத்த தம்பதிகளை ஒரு முறை அல்ல.. நூறு முறையாவது தூக்கில் போட வேண்டும் போல் உள்ளது. அனைவரது விழிகளிலும் சுடுநீரை வரவழைத்துவிட்ட இந்த 10 வயது சிறுமியின் சம்பவம் நம் மனதில் நீண்ட காலம் தங்கி.. கனத்து.. வலித்து கொண்டே இருக்கும். போதும் அவள் பட்ட வேதனை.. இனியாவது அவளுக்கு ஒரு புதிய விடியல் பிறக்கட்டும்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
10 year old child brutally torched by couple in Kumbakonam,
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more