கள்ளச்சாராயம் குடித்து கணவன்- மனைவி பலி! தவிக்கும் 10 வயது சிறுமி! தனியே கதறும் சோகம்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து கணவன்- மனைவி இருவரும் உயிரிழந்த நிலையில் அவர்களுடைய குழந்தை அழுத காட்சி காண்போர் நெஞ்சை பதைபதைக்க வைத்தது. கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 37 பேர் இறந்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்த பலருக்கு கண் எரிச்சல், வயிற்று வலி போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டன. இதையடுத்து கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அங்கு சிலரின் உடல்நிலை மோசமடைந்ததால் அவர்கள் புதுவையில் உள்ள ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்ட 127 பேர் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை இந்த விவகாரத்தில் சிகிச்சை பலனின்றி 37 பேர் இறந்துவிட்டனர். இன்னும் தொடர்ந்து பலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக சொல்லப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து சிபிசிஐடி போலீஸார் சாராய வியாபாரி கோவிந்தராஜ், அவரது மனைவி விஜயா, தம்பி தாமோதரன் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
கள்ளச்சாராயம் குடித்து பலருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாலும் ஒவ்வொருவராக இறந்து வருவதாலும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை, விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை, சேலம் அரசு மருத்துவமனை, புதுவை ஜிப்மர் மருத்துவமனை ஆகிய இடங்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக அழுது கொண்டு இருக்கும் காட்சி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆண்கள், பெண்கள் , திருநங்கை ஒருவர் என இறந்ததாக சொல்லப்படும் நிலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த கணவன், மனைவி ஆகிய இருவர் உயிரிழந்த சோகம் பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்த சுரேஷ் உயிரிழந்த நிலையில் அவரைத் தொடர்ந்து அவரது மனைவி வடிவும் உயிரிழந்துவிட்டார்.
இவர்களது 10 வயது சிறுமி அப்பா, அம்மாவின் உடல்கள் வைக்கப்பட்டுள்ள இடத்தில் மாறி மாறி போய் அழும் காட்சி காண்போரை கலங்கச் செய்கிறது. அந்த குழந்தை யாரும் இன்றி ஆதரவற்ற நிலையில் தவித்து வருவதாக சொல்லப்படுகிறது. விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரியில் இருந்து சிறப்பு மருத்துவர்களை கொண்ட குழு கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்த குழு பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள். அதோடு சேலம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இருந்து சிறப்பு மருத்துவர் குழு கள்ளக்குறிச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 18 பேர் ஆம்புலன்ஸ் மூலமாக புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு உயர் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மேல்சிகிச்சைக்கு தேவையான அனைத்து மருந்துகளும், விழுப்புரம், சேலம், திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாயும் சிகிச்சை பெறுவோருக்கு ரூ 50 ஆயிரமும் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சியில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், எ.வ.வேலு, பொன்முடி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் முகாமிட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அது போல் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதாவும் கள்ளக்குறிச்சிக்கு விரைந்துள்ளார்.
கள்ளச்சாராய விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில் மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி எஸ்பி சமய்சிங் மீனா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவைச் சேர்ந்த, டிஎஸ்பி தமிழ்செல்வன், கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு இன்ஸ்பெக்டர் கவிதா, திருக்கோவிலூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு இன்ஸ்பெக்டர் பாண்டி செல்வி, திருக்கோவிலூர், சப் இன்ஸ்பெக்டர் பாரதி மற்றும் அப்பகுதி காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தன், ஷிவ்சந்திரன், உதவி ஆய்வாளர், காவல் நிலைய எழுத்தர் பாஸ்கரன், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மனோஜ், காவல் துணை கண்காணிப்பாளர், திருக்கோவிலூர் ஆகியோரும் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
-
நீங்க நல்லா இருக்கோனும்..பார்ட்டி ஃபண்டை கட் செய்த விஜய்! குஷியில் வீடுகட்டுவோர்..ராடாரில் ஆபீசர்ஸ் -
சட்டப்பேரவை கூட்டம்.. விஜய்க்கு காத்திருக்கும் சிக்கல்! பெரிய பிளானுடன் இறங்கும் எதிர்க்கட்சிகள்! -
வெள்ளை அறிக்கை இல்ல.. வேஸ்ட் அறிக்கை! கோட்டையில் லெஃப்ட் ரைட் வாங்கிய சிஎம் விஜய்! பம்மிய ஆபீசர்ஸ்? -
எகிறும் எதிர்பார்ப்பு! ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது தமிழக சட்டப்பேரவை! -
அப்போ உரிமை தொகை நிறுத்தப்படுமா? "தமிழக நிதி நிலைமை மோசம்! ஆனால்.." நிதியமைச்சர் கொடுத்த விளக்கம் -
முதலில் சங்கர் ஜிவால்.. இப்போது சுனில் குமார்.. தமிழக மாஜி டிஜிபிக்கள் அடுத்தடுத்து விலகல்! பின்னணி -
பதவியே வேண்டாம்.. தீயணைப்பு ஆணைய தலைவர் பொறுப்பை ராஜினாமா செய்த மாஜி டிஜிபி சங்கர் ஜிவால்! -
உதயமாகும் "தமிழ்நாடு கரப்பான் பூச்சி ஜனதா கட்சி.." தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பம்! -
தமிழ்நாட்டு தலைக்கு மேல் கத்தி.. ஏடாகூடமான எல் நினோ! கொஞ்சம் பிசகினாலும் போச்சு! பறந்த வார்னிங்! -
பொதுப்பணித்துறை டெண்டர்களில்.. இனி முறைகேடு நடக்காது! தமிழ்நாடு அரசு எடுத்த அதிரடி மாற்றம்! -
நயினார் நாகேந்திரனுக்கு.. கேரள ஆளுநர் பதவி! அள்ளிக்கொடுக்கும் பாஜக! அப்போ.. அண்ணாமலை ரூட் சரிதான்! -
ரூ.13 லட்சம் கோடி கடன்! “திமுகதான் பதில் சொல்ல வேண்டும்!” டோனை மாற்றிய திருமாவளவன்












Click it and Unblock the Notifications