100 கிலோ கஞ்சாவுடன் வந்த லிங்குச்சாமி கைது.. மதுரையில்!
மதுரை: மதுரைக்கு ரயிலில் 100 கிலோ கஞ்சாவுடன் வந்திறங்கி லிங்குச்சாமி என்ற நபரைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.
கஞ்சா கடத்தல் பல ரூபங்களில் தங்கு தடையின்றி நடக்கிறது. வயது வித்தியாசமில்லாமல், ஆண், பெண் என்று பாகுபாடு இல்லாமல் பலரும் கஞ்சாத் தொழிலில் இருந்து வருகின்றனர்.
பெரும்பாலும் கஞ்சா வியாபாரிகள் கஞ்சா கடத்தலை பெண்கள் மூலமாக அதிலும் வயதான பெண்கள் மூலமாகத்தான் அதிகம் செய்வார்கள். அப்போதுதான் சந்தேகப்பட மாட்டார்கள் என்று. ஆனால் அப்படிப்பட்ட பெண்களைத்தான் அதிக அளவில் போலீஸார் கைது செய்துள்ளனர்.
இந்த நிலையில் ஆந்திராவிலிருந்து மூட்டை மூட்டையாக கஞ்சாவுடன் வந்த ஒரு துணிகர நபரைப் போலீஸார் வளைத்துப் பிடித்துள்ளனர். அவரது பெயர் லிங்குச்சாமி.
இவர் 100 கிலோ கஞ்சாவுடன் ஆந்திராவிலிருந்து மதுரைக்கு ரயிலில் வந்தார். ரயில் நிலையத்தில் வைத்து அவரை ரயில்வே போலீஸார் சோதனையிட்டபோது கஞ்சாவுடன் சிக்கிக் கொண்டார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
-
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications