ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களுக்கு விரைவில் பதவி உயர்வு
நெல்லை: தமிழகத்தில் பட்டதாரி ஆசிரியர்கள் 1000 பேருக்கு விரைவில் பதவி உயர்வு அளிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.
பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களாகவும், உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாகவும் பதவி உயர்வு பெறலாம். இவ்வாறு பதவி பெற்றவர்கள் இடமாறுதல் பெறலாம் என்ற நடைமுறை இருந்தது.
ஆனால் அதை கல்வி துறை மாற்றி அமைத்தது. பதவி உயர்வுக்கு பின் இடமாறுதல் பெற முடியாது என்றும், தேர்ந்தெடுத்த பதவி உயர்வில் இருந்தே அடுத்த பதவி உயர்வு இருக்கும் என்றும் தெரிவித்தது. இதை ஆசிரியர்கள் கடுமையாக எதிர்த்தனர். உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது.
இந்நிலையில் இந்த வழக்கில் பழைய நடைமுறையை பின்பற்றப்படும் என கல்வி துறை நீதிமன்றத்தில் தெரிவித்தது. இதையடுத்து பிரச்சனை முடிவுக்கு வந்தது. இதை தொடர்ந்து பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. பதவி உயர்வுக்கு தகுதி உடையோர் பட்டியல், காலி பணியிட விபரம் போன்ற விபரங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. அரசிடம் இருந்து அனுமதி கிடைத்ததும் பதவி உயர்வு மற்றும் ஓதுக்கீடு செய்வதற்கான கலந்தாய்வு நடத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. எனவே பட்டதாரி ஆசிரியர்களுக்கு விரைவில் பதவி உயர்வு வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் விரைவில் 1000 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க உள்ளது.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications