ஆவடி நகை கொள்ளையர்கள் முட்டை பிரகாஷ், நரசிம்மன் கைது- 112 சவரன் நகைகள் மீட்பு
ஆவடியில் கொள்ளைபோன 112 சவரன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளதுடன் 2 பேரை கைது செய்துள்ளனர்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஆவடியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர். கொள்ளையர்களிடமிருந்து 112 சவரன் நகைகளையும் அதிரடியாக மீட்டுள்ளனர்.
சென்னை ஆவடி,திருமுல்லைவாயில், அம்பத்தூர் உள்ளிட்ட சென்னையின் புறநகர் பகுதிகளில் பூட்டிய வீடுகளில் தொடர் கொள்ளைகள் நடைபெற்று வந்தன.

இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த ஆவடி டேங்க் பேக்டர் போலீசார் தொடர் கொள்ளையில் ஈடுபட்டோரை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில், அப்பகுதியில் பல கொள்ளைகளில் ஈடுபட்ட பிரகாஷ் என்ற முட்டை பிரகாஷ் மற்றும் நரசிம்மன் ஆகிய இருவரை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 30 லட்சம் மதிப்புள்ள 112 சவரன் நகைகளையும் போலீசார் மீட்டனர். பின்னர் கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications