புதிய வேலை மசோதா : ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக எதிர்த்த மசோதா.. முதல்வராக இன்று ஆதரித்தது ஏன்?
சென்னை: 2020 இல் எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது 12 மணி நேரம் வேலையை கொண்டுவரக்கூடாது என்று அன்றைய அதிமுக அரசை வலியுறுத்திய ஸ்டாலின், முதல்வர் ஆன பின்னர் எப்படி ஏற்றுக்கொண்டு இன்று சட்டத்தை கொண்டு வந்துள்ளார் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
தமிழக சட்டசபையில் இன்று 12 மணி வேலை நேர மசோதா எதிர்க்கட்சியான அதிமுக மற்றும் திமுக கூட்டணிக் கட்சிகளின் எதிர்ப்பை மீறி நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதால், தனியார் நிறுவனங்கள் விரும்பினால், ஊழியர்களை 12 மணி நேரம் வேலை செய்ய வலியுறத்தலாம். அதேநேரம் 12 மணி நேரம் வேலை செய்ய வைத்தால், வாரத்தில் 3 நாட்கள் விடுமுறை அளிக்க வேண்டியது கட்டாயம் ஆகும்.

இந்த சட்டம் 2020ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்ததாகும். தற்போது சில மாநிலங்களில் இச்சட்டம் அமலில் இருக்கிறது. ஆனால் நாடு முழுவதும் அமல்படுத்தவில்லை. இதற்கு முக்கிய காரணம் இன்னும் பல மாநிலங்களில் ஒப்புக்கொள்ள மறுப்பது தான்.
சரி விஷயத்துக்கு வருவோம். தனியார் நிறுவனங்களில் வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக உயர்த்தும் இந்த சட்ட மசோதாவை சட்டசபையில் கொண்டு வந்த போது, எதிர்க்கட்சிகளுடன், திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால் கூட்டணி கட்சிகள் எதிர்ப்பையும் மீறி குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
இந்த மசோதாவை கூட்டணி கட்சிகள் எதிர்க்கிறது என்று இல்லை, முதல்வர் ஸ்டாலினே கடந்த 2020ம் ஆண்டு கடுமையாக எதிர்த்தார். கடந்த 2020ம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக தமிழகத்தில் ஆட்சியில் இருந்தது. அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின், வேலை நேரத்தை 12 மணி நேரமாக அதிகரிக்கும் மசோதாவை எதிர்த்தார்,.

அப்போது ஸ்டாலின் கூறும் போது தொழிலாளர் உரிமைகள் விஷயத்தில் மத்திய அரசும், பாஜக அரசும் என்ன செய்கிறதோ அதையே தமிழக அரசு காப்பி செய்து மாநிலத்திலும் செயல்படுத்தக் கூடாது என்றார். மேலும் தினசரி வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக உயர்த்தி உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், குஜராத் போன்ற மாநிலங்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையை மத்திய தொழிலாளர் அமைச்சகம் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றார். மேலும் லாக்டவுன் நீக்கப்பட்ட பிறகு, நாட்டில் உள்ள தொழிலாளர்களின் வேலை நேரம் அதிகரிக்கப்படாது என்று உத்திரவாதம் அளிக்க வெளியிட வேண்டும் என்று மத்திய அரசை ஸ்டாலின் கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் இந்த மசோதாவை இன்று ஏற்றுக்கொண்டு சட்டசபையில் நிறைவேற்றி இருப்பதை திமுக கூட்டணி கட்சியினரே சமூக வலைதளங்களில் விமர்சிக்கிறார்கள். இந்த முடிவு, யாரோ கொடுத்த தவறான அறிவுரை என்று அவர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.

இதனிடையே 12 மணி நேரம் வேலை மசோதா ஏன் கொண்டு வரப்பட்டது என்பது குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்திருக்கிறார். அவர் கூறும் போது "வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீட்டிற்காக தமிழகத்தை நோக்கி வருகின்றன. தொழிற்சாலைகளில் நெகிழ்வுத் தன்மை வரவேண்டும் என்பதற்காக, இந்தச் சட்டம் கொண்டுவந்துள்ளோம். எந்த தொழிலாளர்கள் விரும்புகிறார்களோ, அவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும். இது தொடர்பாக உயர்மட்ட குழு அமைக்கப்படும்" என்றார்.
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் கணேசன் பேசுகையில், "வாரத்திற்கு 48 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும்; இந்த நேரத்தை 4 நாட்களில் முடித்துவிட்ட பிறகு 5-வது நாளாக தொழிலாளர் வேலை செய்ய விரும்பினால், அவர்களுக்கு சம்பளம் வழங்கும் வகையில் சட்டம் உள்ளது; அனைத்து நிறுவனங்களுக்கும் இந்த சட்டம் இல்லை; விரும்பக்கூடிய தொழிற்சாலைகள், தொழிலாளர்களுக்கு மட்டுமே இந்தச் சட்டம் கொண்டுவரப்படும்" என்றார்.
-
ஹனிமூன் பீரியட் எங்கே? ஸ்டாலின் போல விஜய் அதிர்ஷ்டசாலி இல்லை! சிக்கலாகும் மின்சாரம், சட்டம் ஒழுங்கு? -
பயிர் கடன் ரூ.3 லட்சம்.. ஆனால் தள்ளுபடி வெறும் ரூ.50 ஆயிரமா? விஜய் அறிவிப்பால் விவசாயிகள் ஏமாற்றம் -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபி யார்? 3 சீனியர் ஐபிஎஸ் பெயர்களுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்.. யார் இவர்கள்? -
ஐபிஎஸ் டிரான்ஸ்ஃபர்! காத்திருப்போர் பட்டியலில் இருந்த அருண் IPS-க்கு சூப்பர் பதவி கொடுத்த விஜய் -
50% அல்லது 69%? உச்ச நீதிமன்றத்தில் நாளை தமிழகத்தின் இட ஒதுக்கீடு சட்டப் போர்! பின்னணி என்ன தெரியுமா -
திரையரங்குகளில் 5 காட்சிகளுக்கு அனுமதி! முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு! திரை துறையினர் ஹேப்பி! -
இடைத்தேர்தலில் மீண்டும் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடுவீர்களா? மரகதம் குமரவேல் ரியாக்ஷன் என்ன? -
பிச்சு உதற போகுது கனமழை.. 7 மாவட்டங்களில் டமால் டுமீல் தான்! வங்கக்கடல் சக்கரத்தால் இனி கூலிங் தான்! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு












Click it and Unblock the Notifications