தமிழகத்தில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம்: தமிழக அரசு அதிரடி உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் 14 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளையும், 18 ஐ.பி.எஸ்., அதிகாரிகளையும் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சென்னை கலெக்டராக பணியாற்றி வந்த கோவிந்தராஜ், கரூர் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். தஞ்சாவூர் கலெக்டராக அண்ணாதுரை, நாமக்கல் கலெக்டராக ஆசியா மரியம், வேலூர் கலெக்டராக ராமன், திருவாரூர் கலெக்டராக நிர்மல்ராஜ், கடலூர் கலெக்டராக ஞானசேகரன், திண்டுக்கல் கலெக்டராக வினய் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 12 IAS officers transfer

விருதுநகர் கலெக்டர் ராஜாராமன் நகர நிர்வாக இணைய ஆணையராகவும், கோவை முன்னாள் கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் தோட்டக்கலைத்துறை இயக்குனராகவும் (தற்காலிக பதவி), கடலூர் கலெக்டர் சுரேஷ் குமார் நில நிர்வாக இணை கமிஷனராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வேலூர் கலெக்டர் நந்தகோபால், கால் நடை பராமரிப்பு, பால் வளம் மற்றும் மீன்வளத்துறை இணை செயலாளராகவும், தஞ்சை கலெக்டர் சுப்பையன் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் இயக்குனராகவும் (தற்காலிக பதவி) நியமிக்கப்பட்டுள்ளனர்.

திருவாரூர் கலெக்டர் மதிவாணன் சென்னை பெருநகர வளர்ச்சி ஆணைய தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். கரூர் சீனியர் கலெக்டர் காகர்லா உஷா நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதி சேவை லிமிடெட் நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் ஐ.பி.எஸ்.,அதிகாரிகள் மாற்றப்பட்ட பட்டியல்:

சஞ்சய்குமார் - சேலம் மாநகர கமிஷ்னர்

சுமித்சரண் - சென்னை குற்றஆவண காப்ப ஐ.ஜி.,

பாரி - கோவை மேற்குமண்டல ஐ.ஜி.,

மஞ்சுநாதா- திருச்சி கமிஷ்னர்

சஞ்சய் மாத்தூர் - திருப்பூர் கமிஷ்னர்

ராஜன் - சேலம் எஸ்.பி.

அமித்குமார் சிங் - நெல்லை துணை கமிஷ்னர்

மகேஸ்வரன் - நாமக்கல் எஸ்.பி.,

சிவகுமார் - ஈரோடு எஸ்.பி.,

ராஜசேகரன் - கரூர் எஸ்.பி.,

வந்திதா பாண்டே - சென்னை கண்ட்ரோல் ரூம் துணை கமிஷ்னர்

ஜெயசந்திரன் - சிவகங்கை எஸ்.பி.,

துரை - நாகப்பட்டிணம் எஸ்.பி.,

உமா - திருப்பூர் எஸ்.பி.,

சந்தோஷ் ஹதிமணி - சென்னை போலீஸ் பயிற்சி பள்ளி எஸ்.பி.,

மகேஷ்குமார் - கிருஷ்ணகிரி எஸ்.பி.,

சேவியர் தன்ராஜ் - சென்னை கியூ பிரிவு எஸ்.பி.,⁠⁠⁠⁠

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+