இந்திய அம்மாவிடம் இதை இதை எல்லாம் தான் சொல்லவே கூடாது!
சென்னை: இந்திய தாய்மார்களிடம் சொல்லக் கூடாத 12 விஷயங்கள் என்னென்னவென்று தெரியுமா உங்களுக்கு?
இந்திய தாய்மார்களிடம் சொல்லக் கூடாத 12 விஷயங்கள் என்னென்னவென்று தெரியவில்லை என்றால் இந்த செய்தியை படித்துப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். அம்மா என்றால் சும்மா இல்லை தான். ஆனால் அந்த அம்மாவிடம் சொல்லக் கூடாத விஷயங்கள் என்றும் சில உள்ளன.
அப்படி அம்மாவிடம் அதிலும் இந்திய தாயிடம் சொல்லக் கூடாத விஷயங்கள் இவை தான்,

அன்பு
மகனோ, மகளோ இந்திய தாயிடம் சென்று அம்மா உங்களுக்கு என் மீது பாசமே இல்லை என்று மட்டும் ஒரு வார்த்தையை கூறி விடாதீர்கள். அவ்வளவு தான் அதன் பிறகு அம்மா குமுறிக் குமுறி அழுதுவிடுவார்.

கர்ப்பம்
அம்மா, நான் கர்ப்பமாக உள்ளேன் என நினைக்கிறேன் என்று மகள் கூறினால் அவ்வளவு தான் அம்மாவுக்கு மாரடைப்பே வந்துவிடும்.

சாப்பாடு வேண்டாம்
அம்மா எனக்கு இரவு உணவு வேண்டாம் என்று தாயிடம் கூறினால். நீ வளரும் பிள்ளை சாப்பிடாமல் இருக்கக் கூடாது. உனக்கு எத்தனை வயதானாலும் நீ எனக்கு வளரும் பிள்ளை என்று கூறுவது இந்திய தாய்மார்களின் வழக்கம்.

கார்
தாயும், மகளும் காரில் செல்கையில் அம்மாவோ மகளை பார்த்து ரோட்டை பார்த்து காரை ஓட்டு என்பார். அம்மா பாருங்கள், நான் இரண்டு கையையும் விட்டுவிட்டு ஓட்டுவேன் என்று கூறி கையை எடுத்தால் அம்மாவுக்கு மயக்கம் வந்துவிடும்.

உப்பு
அம்மா வந்து மகனிடம் சாப்பாடு எப்படி இருக்கிறது என்று கேட்டால் மகன் உப்பு இல்லை என்று கூறினால் அதன் பிறகு அவ்வளவு தான். நான் எவ்வளவு கஷ்டப்பட்டு அனைவருக்கும் சமைத்துள்ளேன், நீ எப்பொழுது பார்த்தாலும் குறை கூறிக் கொண்டே இருக்கிறாய் என்று அம்மா சீறிவிடுவார்கள்.

ஓரினச்சேர்க்கை
மகள் தாயிடம் சென்று அம்மா நான் ஒரு பெண்ணை காதலிக்கிறேன் என்று கூறினால் தாயின் தலையில் இடி விழுந்துவிடும்.

காயம்
மகனோ, மகளோ அம்மாவிடம் சென்று கண்ணுக்கே தெரியாத அளவு காயத்தை காட்டினால் ஏதோ அரிவாள் வெட்டு விழுந்த அளவுக்கு அம்மா பதறுவார்.

காதல்
அம்மா நான் ஒரு பையனை காதலிக்கிறேன் என்று மகள் கூறினால் அந்த மகளுக்கு நிச்சயம் பளார் பளார் விழும். வீடே போர்க்களமாகிவிடும்.

பணம்
மகன் தாயிடம் சென்று அம்மா பணம் வேண்டும் என்றவுடன் அம்மா எவ்வளவு வேண்டும் என்று கேட்பார். மகன் தனக்கு எவ்வளவு வேண்டும் என்று கூறியதை கேட்டதும் அம்மா கோபப்பட்டு பணம் என்ன மரத்தில் காய்க்கிறதா என்று கத்துவார்.

டாட்டூ
அம்மா நான் இடுப்பில் டாட்டூ போட்டுள்ளேனே என்று மகள் தாயிடம் கூறினால் அந்த அம்மா கடுப்பாகி இனி யார் உன்னை திருமணம் செய்வார்கள் என்று அழுது புலம்பிவிடுவார்.

குண்டு
மகன் தாயைப் பார்த்து அம்மா நீங்க குண்டாகிவிட்டீர்கள் என்று கூறவே கூடாது. அவ்வாறு கூறினால் அவரோ உன்னை சுமந்து பெற்றெடுத்த பிறகு உன்னையும், உன் தந்தையையும் கவனிக்கவே நேரம் சரியாக உள்ளது. அதனால் தான் குண்டாகிவிட்டேன் என்பார்.

ஓடிப் போயிட்டேன்
மகள் அம்மாவுக்கு போன் செய்து அம்மா நான் ஒரு பையனுடன் வீட்டை விட்டு ஓடிவிட்டேன் என்று மகள் கூறினால் தாய்க்கு அதிர்ச்சி ஏற்படும் என்று சொல்வதை விட அவரின் நிலையை விவரிக்க வார்த்தை இல்லை என்றே கூற வேண்டும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications