தூத்துக்குடியில் வீரன் அழகுமுத்துகோன் ஜெயந்தி விழா - 144 தடை உத்தரவால் பரபரப்பு
தூத்தூக்குடி: வீரன் அழகுமுத்துகோன் ஜெயந்தி விழாவை முன்னிடடு தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நாளை காலை முதல் 12ம் தேதி காலை வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு பதட்டம் நிலவுகிறது.
இதுகுறித்து எஸ்பி துரை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது :-
சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துகோனின் 255வது ஜெயந்தி விழா தூத்துக்குடி மாவட்டம் கட்டாலங்குளத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் வைத்து நாளை 11ம் தேதி அரசு சார்பில் கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவில் யாதவர் சமுகத்தினர் மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளை சேர்ந்த ஏராளமாணோர் நினைவிடத்துக்கு வந்து அஞ்சலி செலுத்துவர். இதனை முன்னிட்டு அசம்பாவிதம் நடக்காத வண்ணம் பலத்த பாதுகாபபுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஒரு ஏடிஎஸ்பி, 11 டிஎஸ்பிகள் உள்பட மொத்தம் 700 போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மாவட்ட எல்லையில் போலீஸ் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர வாகன சோதனையும் நடந்து வருகிறது. தேசிய நெடுஞ்சாலை ரோந்து, தலைவர்களின் சிலைகள், பிரச்சனைகுரிய இடங்கள் அவற்றில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேலும் விழா அமைதியாக நடக்க ஏதுவாக சட்டம் மற்றும் ஓழுங்கை பராமரிக்கும் பொருட்டு கலெக்டரால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு நாளை காலை 5 மணி முதல் 12ம் தேதி காலை 5 மணி வரை இந்த உத்தரவு அமுல்படுத்தப்பட உள்ளது.
இதன்படி கட்டாலங்குளம் மற்றும் பிற பகுதிகளிலிருந்து அழகுமுத்துகோன் ஜெயந்தி விழாவில் கலந்து கொள்ள வருபவர்கள் ஜோதி, கத்தி, கம்பு, வேல்கம்பு, குச்சி, கற்கள், மற்றும் இதர ஆயுதங்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் கூடுவதற்கும், அனைத்து வகை வாடகை வாகனங்கள் மூலம் கொள்ளவும் தடை விதிக்கப்பட்டுள்ளது' என இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications