"புல்லட்"டுக்கு.. 15 நாள் ஜெயில்.. திருச்சி சிறையில் அடைப்பு.. ஜீப்பில் "கப்சிப்" பயணம்!
போலீஸ் அதிகாரிகளுக்கு வாட்ஸ் ஆப்பில் மிரட்டல் விடுத்த வழக்கில் கைதான ரவுடி புல்லட் நாகராஜனுக்கு பெரியகுளம் நீதிமன்றம் 15 நாள் நீதிமன்ற காவல் விதித்துள்ளது.
திருச்சி: போலீஸ் அதிகாரிகளுக்கு வாட்ஸ் ஆப்பில் மிரட்டல் விடுத்த வழக்கில் கைதான ரவுடி புல்லட் நாகராஜனுக்கு பெரியகுளம் நீதிமன்றம் 15 நாள் நீதிமன்ற காவல் விதித்துள்ளது.
தேனியைச் சேர்ந்த ரவுடி புல்லட் நாகராஜன். மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவரது அண்ணனின் அடாவடியை கட்டுப்படுத்த மதுரை சிறைத்துறை எஸ்.பி. ஊர்மிளா கமாண்டோ படையினரை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட புல்லட்டின் அண்ணன் நடந்ததை தம்பியிடம் கூற, கொஞ்சமும் அச்சமின்றி சிறைத்துறை எஸ்பிக்கு வாட்ஸ்அப் ஆடியோவில் கொலை மிரட்டல் விடுத்தார்.

பகிரங்க கொலைமிரட்டல்
ஜெயிலர் ஜெயபிரகாஷை உயிருடன் எரித்தது நியாபகம் இருக்கா என்று கேட்ட அவர் லாரி உங்க மேல ஏறும் என பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்தார்.

கைது செய்யப்பட்ட புல்லட்
இந்த வழக்கில் மதுரை கரிமேடு தனிப்படை போலீசார் புல்லட் நாகராஜனை தேடி வந்நதனர். இந்நிலையில் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் புல்லட் நாகராஜன் நேற்று கைது செய்யப்பட்டார்.

டம்மி துப்பாக்கி, கத்தி
அவர் புல்லட்டில் இருந்து டம்மி துப்பாக்கிகள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து புல்லட் நாகராஜன் மீது பெரியகுளம் போலீசர் 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

திருச்சி சிறையில் அடைப்பு
நேற்று நள்ளிரவு தேனி பெரியகுளம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் புல்லட் நாகராஜன். அவரை 15 நாள் கோர்ட் காவலி்ல் வைக்க நீதிபதி அருண்குமார் உத்தரவிட்டார். இதையடுத்து புல்லட் நாகராஜன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
-
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications