ஓசூர் அருகே 3 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 7ம் வகுப்பு மாணவன் கைது!

Subscribe to Oneindia Tamil

ஓசூர்: ஓசூர் அருகே 3 வயது சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்ததாக 7ம் வகுப்பு மாணவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

ஒசூர் வட்டம், பாகலூர் கோட்டை பகுதியில் கடந்த சனிக்கிழமையன்று, 3 வயது சிறுமி ஒருவர் பெற்றோர் வெளியே சென்றிருந்ததால், வீட்டில் தனியாக விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது பக்கத்து வீட்டைச் சேர்ந்த 7ம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் அங்கு வந்துள்ளான்.

15-year-old rapes three-yr-old, held

தனிமையில் இருந்த சிறுமியை, அச்சிறுவன் பலாத்காரம் செய்துள்ளான். அப்போது சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தார் ஓடி வந்துள்ளனர். பின்னர், சிறுவனைக் கையும் களவுமாகப் பிடித்து ஓசூர் நகர மகளிர் காவல் நிலையத்தில் அவர்கள் ஒப்படைத்தனர்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், சிறுவனைக் கைது செய்தனர். மேலும், நீதிமன்ற விசாரணைக்குப் பின்னர், அச்சிறுவன் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப் படுவார் என காவல்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+