இன்று கோவை குண்டுவெடிப்பு தினம்- பாதுகாப்பு பணியில் 1500 போலீசார்
கோவை: கோவை குண்டுவெடிப்பு தினம் மற்றும் காதலர் தினத்தை முன்னிட்டு கோவையில் இன்று 1500 போலீசார் பாதுகாப்பு பணிக்கு அமர்த்தப்பட்டு உள்ளனர்.
கோவையில் கடந்த 1998 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது. இதில் 58 பேர் பலியானார்கள்.
இன்று கோவை குண்டுவெடிப்பு நினைவு தினம் என்பதாலும், இந்து அமைப்புகள் சார்பில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் மற்றும் அஞ்சலி கூட்டம் நடத்துவார்கள் என்பதாலும் கோவை மாநகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
கோவை குண்டு வெடிப்பு தினம் மற்றும் காதலர் தினத்தை முன்னிட்டு கோவையில் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டு உள்ளனர். மேலும் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களான பஸ்நிலையங்கள், ரெயில் நிலையங்கள், கோவில்கள், மசூதிகள் மற்றும் இந்து அமைப்புகளின் அலுவலகங்கள் ஆகியவற்றுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
அது போன்று இன்று காதலர் தினம் என்பதால் காதலர்கள் அதிகமாக கூடும் பூங்காக்கள், தியேட்டர்களுக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. பொது இடங்களில் சுற்றும் காதலர்களை பிடித்து அவர்களின் பெற்றோர்களை வரவழைத்து திருமணம் செய்து வைக்க உள்ளதாக ஒருசிலர் அறிவித்து உள்ளனர்.
அவ்வாறு செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications