தமிழகத்தில் பரவும் டெங்கு: கோவை, விழுப்புரத்தில் 16 பேர் பாதிப்பு
கோவை: தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில் கோவை, விழுப்புரத்தில் 16 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் பல பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில்,தமிழகத்தில் அதன் பாதிப்பு குறைவாக இருப்பதாக தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் அண்மையில் தெரிவித்திருந்தார்

கோவையில் டெங்கு
இந்த நிலையில் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 58 பேரில் 8 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும்,ஒருவர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை அதிகாரி சவுந்திர வேல் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம்
இதனிடையே விழுப்புரம் சுற்றுவட்டாரப் பகுதியில் கடந்த 15 நாட்களாக மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. இந்நிலையில் தொடர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் 5 பெண்கள் உள்ளிட்ட 8 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர்கள் அனைவருக்கு முன்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் உள்ள தனி வார்டில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அதிகாரிகள் ஆய்வு
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் ஊர்களுக்கு சென்று காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சுாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வுகள் மேற்கொண்டுள்ளனர். காய்ச்சல் பரவியுள்ள பகுதிகளில் அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளபட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications