செங்கல்பட்டு அரசு சிறுவர் சீர்திருத்தப் பள்ளியிலிருந்து 17 பேர் தப்பியோட்டம்: 2 பேர் சிக்கினர்
செங்கல்பட்டு: செங்கல்பட்டு அரசு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் இருந்து 17 பேர் தப்பியோடினர். பட்டப்பகலில் அவர்கள் தப்பியோடிய சம்பவம், சீர்திருத்தப்பள்ளி காவலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில், 2 சிறுவர்களை ஆத்தூர் அருகே போலீஸார் மடக்கி பிடித்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு ரயில் நிலையம் அருகே அரசினர் சிறுவர்களுக்கான சீர்திருத்த பள்ளி ஒன்று அமைந்துள்ளது. கடந்த 2008ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் இந்த சிறுவர் இல்லத்தில், 27 சிறுவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

சிறுவர்கள் இல்லத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த 17 இளம் குற்றவாளிகள், அறையில் இருந்த இரும்பு ஜன்னலை உடைத்து, துணிகளைக் கயிறாகப் பயன்படுத்தி ஞாயிறன்று மதியம் இல்லத்தில் இருந்து தப்பிச் சென்றனர். இதைத் தொடர்ந்து, சிறப்பு இல்ல கண்காணிப்பாளர் அளித்த தகவலின்பேரில், செங்கல்பட்டு தாலுகா போலீஸார், சிறுவர் இல்லத்துக்கு நேரில் சென்று ஆய்வு மேற் கொண்டனர். ஏ.எஸ்.பியின் உத்தரவின் பேரில் ஆத்தூர் வாழை தோட்டத்தில் பதுங்கியிருந்த இரண்டு சிறுவர்களை போலீஸார் மடக்கி பிடித்தனர், மற்ற சிறுவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
வடக்கு மண்டல ஐஜி மஞ்சுநாத் சிறார்கள் இல்லத்தை நேற்று மாலை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், தப்பிச் சென்ற சிறுவர்களை கண்டுபிடிப்பது தொடர்பாக போலீஸாரிடம் ஆலோசனை செய்தார். தொடர்ந்து, சிறுவர்கள் இல்லத்தை பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் சிறுவர்கள் தப்பி சென்ற பகுதிகளின் விவரங்களை கேட்டறிந்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய ஐஜி. மஞ்சுநாத், நலத்துறையின் கீழ் சிறுவர்கள் இல்லம் செயல்படுவதால், போலீஸார் தனிப்பட்ட முறையில் இந்த விஷயத்தில் செயல்பட முடியாது. எனினும், பதுகாப்பு அம்சங்களை மேம்படுத்துவது குறித்து சம்பந்தப்பட்ட துறையினரிடம் பரிந்துரைப்பது மற்றும் ஆலோசனை வழங்குவது போன்ற பணிகளை மேற்கொள்ள உள்ளோம் என்றார்.
தமிழகம் முழுவதும் குற்றவழக்குகளில் கைது செய்யப்படும் 16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் இங்கு அடைக்கப்படுகின்றனர். போதிய காவலர்கள் பணியில் இல்லாததன் காரணமாக, சிறுவர்கள் தப்பி ஒடியதாக கூறப்படுகிறது. சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு உரிய பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்தி, அதிகளவு காவலர்களை நியமிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications