நெல்லை மாவட்டத்தில் இந்த ஆண்டில் 175 பேர் குண்டர் சட்டத்தில் கைது - எஸ்.பி. தகவல்
நெல்லை மாவட்டத்தில் இந்த ஆண்டில் 175 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் இந்த ஆண்டில் 175 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விக்ரமன் தெரிவித்துள்ளார்.
நெல்லை அருகே உள்ள கொண்டாநகரம் நாராயணசாமி கோவில் தெருவை சேர்ந்த சொர்ணதேவர் மகன் ரமேஷ் என்ற ராமையா (வயது30). இவர் தாழையூத்து பகுதியில் ரவுடி தனத்தில் ஈடுபட்டு வந்தார்.

இவரால் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் என்பதால் இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விக்ரமன், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதை ஆட்சியர் கருணாகரன் ஏற்று ரமேசை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதன் பேரில் ரமேஷ் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
இதேபோல் மூன்றடைப்பு தோட்டாக்குடி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த கணேசன் என்பவர் மீது நெல்லை சந்திப்பு பகுதியில் கந்து வட்டி வசூல் செய்தல், கொலை மிரட்டல், கொலை முயற்சி, ஆட்களை கடத்தி சட்ட விரோதமாக துன்புறுத்துதல் போன்ற பல்வேறு வழக்குகள் உள்ளன. நெல்லை போலீஸ் துணை கமிஷனர் பிரதீப் குமார், உதவி ஆணையாளர் மாரிமுத்து, ஆகியோர் பரிந்துரையின் பேரில், கணேசனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் திருஞானம் உத்தரவிட்டார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதுகுறித்து நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விக்ரமன் கூறுகையில், நெல்லை மாவட்டத்தில் குற்றங்களை குறைப்பதற்காக இந்த ஆண்டில் இதுவரை 175 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications