தமிழக சட்டசபை தேர்தல்... பாஜக தேர்தல் அறிக்கை தயாரிக்க 18 பேர் குழு
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கை தயாரிக்க 18 பெர் கொண்ட குழு அமைக்கப்படும் என அக்கட்சியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். மேலும், தங்களது தேர்தல் அறிக்கையில் மதுவிலக்கு உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை எதிர்கொள்வதற்கான ஆயத்த வேலைகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில், தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கை தயாரிக்க 18 பெர் கொண்ட குழு அமைக்கப்படும் என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த ஹெச்.ராஜா கூறுகையில், "மக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டு தேர்தல் அறிக்கை தயாரிக்கப்படும். தமிழக சட்டசபை தேர்தலுக்கான பா.ஜ.க. தேர்தல் அறிக்கை தயாரிக்க 18 பேர் குழு அமைக்கப்படும். எங்களது தேர்தல் அறிக்கையில் மதுவிலக்கு உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெறும்" என்றார்.


Click it and Unblock the Notifications
