18 எம்எல்ஏக்கள் நீக்கம் செல்லும் எனில் இடைத்தேர்தல்.. ஆட்சியை தீர்மானிக்கும் மினி பொதுத்தேர்தல்
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில், எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது சரிதான் என்று தீர்ப்பு வந்தால், அந்த தொகுதிகள் எல்லாவற்றுக்கும் தேர்தல் நடக்க வாய்ப்புள்ளது.
Recommended Video

சென்னை: 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில், எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது சரிதான் என்று தீர்ப்பு வந்தால், அந்த தொகுதிகள் எல்லாவற்றுக்கும் தேர்தல் நடக்க வாய்ப்புள்ளது.
இதனால் இந்த தீர்ப்பு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒருவேளை தேர்தல் நடக்கும் பட்சத்தில், அது மினி சட்டமன்ற தேர்தல் போல அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தும்.
தினகரன் ஆதரவு அதிமுக எம்.எல்.ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கபட உள்ளது. பகல் 1 மணிக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான சென்னை உயர்நீதிமன்ற அமர்வு தீர்ப்பளிக்கிறது.

தேர்தல்
இந்த வழக்கில் ஒருவேளை, 18 எம்எல்ஏக்களின் தகுதி நீக்கம் செல்லும் என்று குறிப்பிட்டால் , உடனடியாக 18 தொகுதிகளுக்கான இடங்களும் காலியாகும். தமிழக சட்டசபையின் எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை அதிகாரப்பூர்வமாக 216 ஆக மாறும். இதனால் இந்த தொகுதிகளுக்கு உடனடியாக தேர்தல் நடத்த வேண்டிய நிலை ஏற்படும்.

நம்பிக்கையில்லா தீர்மானம்
சட்டசபை பிரச்சனை தொடர்பான அனைத்து வழக்குகளையும் இந்த அமர்வுதான் சேர்த்து விசாரித்து வருகிறது. இதனால், நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து தீர்ப்பில் கூற வாய்ப்புள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை நம்பிக்கையில்லா தீர்மானம் நடத்த கூடாது என்று நீதிமன்றம் கூறி இருந்தது. இதனால் நம்பிக்கை வாக்கெடுப்பை இனி நடத்தலாமா வேண்டாமா என்று கூற வாய்ப்புள்ளது. பெரும்பாலும், 18 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்திவிட்டு நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த அறிவுரை வழங்க வாய்ப்புள்ளது.

வாய்ப்புள்ளது
எல்லா வழக்குகளையும் நீதிமன்றமே கவனிப்பதால், தேர்தலை, இத்தனை நாட்களுக்குள் நடத்த வேண்டும் என்று குறிப்பிடவும் வாய்ப்புள்ளது. ஒரு குறிப்பிட்ட காலகெடு விதித்து, அதற்குள், தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூற வாய்ப்புள்ளது. தேவையில்லாமல் காலத்தை கடத்த இப்படி தீர்ப்பு வழங்கலாம்.

ஆட்சியை தீர்மானிக்கும்
ஒரு வேளை தேர்தல் நடத்த வேண்டும் என்று கூறினால், அது இடைத்தேர்தல் போல இல்லாமல் மினி சட்டமன்ற பொதுதேர்தல் போல இருக்கும். அதிமுக 110 எம்எல்ஏ பலத்தை கொண்டுள்ளது. தேர்தல் நடக்கும் பட்சத்தில் 8 தொகுதிகளில் வெற்றிபெற்றால் மட்டுமே அதிமுக ஆட்சியை தக்க வைக்க முடியும். இதனால், இந்த தேர்தல் ஆட்சியை தீர்மானிக்கும் மினி சட்டமன்ற தேர்தலாக இருக்கும்.
-
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்!












Click it and Unblock the Notifications