பயங்கரம்.. காலங்காத்தாலே.. கோயில் வாசலில் கிடந்த "மனித" தலை.. அலறிப்போன தஞ்சை..!
தஞ்சையில் இளைஞர் கொலை செய்யப்பட்டார்
தஞ்சாவூர்: விடிகாலையில், கோயில் வாசலில் மனித தலை விழுந்து கிடந்ததை பார்த்ததுமே தஞ்சாவூரே இன்று அலறிப்போய்விட்டது,
தஞ்சாவூர் அருகே உள்ள ரெட்டிப்பாளையம் அன்னை சிவகாமி நகரைச் சேர்ந்தவர் மணி.. 19 வயசுதான் ஆகிறது.. ஆனால், இவர் ஒரு கிரிமினல்.. போலீஸ் ஸ்டேஷனில் ஏகப்பட்ட கேஸ்கள் இவர்மீது உள்ளன.!
இந்நிலையில், நேற்று நள்ளிரவு தஞ்சாவூர் மெடிக்கல் காலேஜ் பக்கம் இருக்கும் ஒரு ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு வெளியே வந்தார்.

தண்டவாளம்
அப்போது அவரை 5 பேர் கொண்ட மர்ம நபர்கள் வழிமறித்தனர்.. அவரை தரதரவென ரெட்டிப்பாளையம் புது ஆற்றங்கரையில் அமைந்துள்ள ரயில்வே தண்டவாளத்திற்கு இழுத்து சென்றனர்.. அந்த இடத்தில் 5 பேரும் மணியை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர்.. இதில் அங்கேயே சுருண்டு விழுந்து இறந்தார் மணி.

கொலை
ஆனால், அந்த கும்பலுக்கு ஆத்திரம் அடங்காத நிலையில், மணியின் தலையை தனியாக வெட்டி எடுத்தனர்.. உடலை மட்டும் தண்டவாளத்திற்கு நடுவே தூக்கி போட்டுவிட்டு, தலையை கையில் எடுத்துக் கொண்டு ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை சென்றனர்.. மணியின் வீட்டருகே இருக்கும் அம்மன் கோயில் வாசலில், அந்த தலையை வைத்துவிட்டு சென்றுவிட்டனர்.. இன்று விடிகாலை அந்த பக்கமாக சென்றவர்கள், வாசலில் தலை இருப்பதை கண்டு அலறி அடித்து கொண்டு ஓடினர்.

தலை
உடனடியாக போலீசாருக்கும் தகவல் தந்தனர்.. இதையடுத்து, தண்டவாளம் பகுதிக்கு சென்று உடலையும் கைப்பற்றினர்.. விசாரணையும் ஆரம்பமானது.. கொலை செய்யப்பட்ட மணிக்கு ஏற்கனவே அந்த பகுதியில் முத்துராமன் என்பவருடன் விரோதம் இருந்து வந்துள்ளது.. முத்துராமனுக்கு வேண்டப்பட்டவரை கொன்றதாக மணி மீது புகார் இருக்கிறது..

விசாரணை
இது சம்பந்தமாக ஏற்கனவே மணி ஜெயிலுக்கும் போய் வந்துள்ளார்.. இந்த பிரச்சனையால்தான் மணியை இப்போது கொன்று பழிதீர்த்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.. ஆனால் அந்த 5 பேர் யார் என்று தெரியவில்லை.. அவர்களை தேடும் பணி ஒரு பக்கம் நடக்கிறது.. இதில் சந்தேகத்திற்கிடமான, 2 பேரை பிடித்து விசாரித்து வருகிறார்கள் போலீசார்.. தேர்தல் சமயத்தில், இப்படி ஒரு கொடூர கொலை சம்பவம் தஞ்சையில் பெரும் பரபரப்பை தந்து வருகிறது.
-
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
உலுக்கிடுச்சே.. மூடிய அறைக்குள் சிக்கிய காதலன்.. அரண்டு போன பிசினஸ்மேன் கணவன்! பெங்களூரு பகீர் -
கடலூரில் முகம் சிதைத்த நிலையில் கிடந்த இளம்பெண் சடலம்.. கொலையாளி யார்? போலீஸ் தீவிரம் -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications