ஓ.பன்னீர் செல்வத்துக்கு குவிகிறது ஆதரவு.. 2 எம்.பிக்கள் இதுவரை ஆதரவு!
முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு குவிகிறது. 2 எம்.பிக்கள் இதுவரை ஆதரவு தெரிவித்துள்ளனர்.
சென்னை: முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு அதிமுகவில் ஆதரவு குவிந்து வருகிறது. அவருக்கு இரண்டு அதிமுக எம்.பிக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ள ஓ.பன்னீர் செல்வத்துக்கு அதிமுகவில் ஆதரவு பெருகி வருகிறது. ஏற்கனவே பெரும்பாலான அதிமுக தொண்டர்கள் அவருக்குப் பின்னால் அணிவகுத்துள்ளனர். தற்போது நிர்வாகிகள் மட்டத்திலும் அவருக்கு ஆதரவு பெருகி வருகிறது.

பல்வேறு நிர்வாகிகளும் அவரை நேரில் சந்தித்து ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர். ஆரம்பத்திலிருந்தே சசிகலாவுக்கு எதிராக குரல் கொடுத்து வரும் கே.பி.முனுசாமி முதல் ஆளாக வந்து நேற்று இரவு ஓ.பன்னீர் செல்வத்தைப் பாராட்டி வாழ்த்தினார். தனது ஆதரவையும் தெரிவித்தார்.
இந்த நிலையில் ராஜ்யசபா எம்.பி. டாக்டர் மைத்ரேயனும் ஓ.பிஎஸ்ஸுக்கு ஆதரவாக திரும்பியுள்ளார். ஏற்கனவே சசிகலா புஷ்பாவும் முதல்வருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். எனவே அதிமுக எம்.பிக்களில் 2 பேர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாக பகிரங்கமாக திரும்பியுள்ளனர்.
இதேபோல முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி, பல முன்னாள் எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோரும் முதல்வரைச் சந்தித்துப் பேசியுள்ளனர். ஆதரவும் தெரிவித்துள்ளனர். நடிகர் எஸ்.வி.சேகர், கராத்தே வீரர் ஹூசேனி ஆகியோரும் முதல்வருக்கு தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளனர். முதல்வரின் துணிச்சலான பேச்சைப் பாராட்டியுள்ளனர்.
முதல்வருக்கு குவிந்து வரும் ஆதரவு மேலும் வலுப்படும் என்றே அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது!












Click it and Unblock the Notifications