ஆரல்வாய்மொழி பலாத்காரம்.. பிச்சைக்காரிகளையும் விடாத சிறுவர்கள்.. நிர்பயா கொடூரத்தை மிஞ்சிய பயங்கரம்!
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி கண்ணுப்பொத்தை பகுதியில் நடந்த கொடூர பலாத்காரம் மற்றும் கொலை தொடர்பாக மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சிறுவர்கள் நடத்திய காமக் கொடூர வெறியாட்டம் போலீஸாரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. சமூகம் எங்கே போய்க் கொண்டிருக்கிறது என்ற பெரும் அயர்ச்சியையும் இது ஏற்படுத்தியுள்ளது.
அஞ்சுகிராமம் பகுதியைச் சேர்ந்த 63 வயதான வீரலட்சுமி என்பவர் ஜெபக் கூட்டத்திற்குப் போய் விட்டுத் திரும்பும்போது நன்கு அறிமுகமான நபர் ஒருவரால் கண்ணுப் பொத்தை காட்டுப் பகுதிக்கு கடத்தப்பட்டார். அங்கு வைத்து மூதாட்டி என்றும் பாராமல் அந்த அயோக்கியன் சீரழித்தான்.
அத்தோடு நில்லாமல் தனது நண்பர்களையும் வரவழைத்து வீரலட்சுமியை சிதைக்க உதவியுள்ளான். மொத்தம் 7 பேர் சேர்ந்து வீரலட்சுமியை நாசப்படுத்தினர். பின்னர் தலையில் கல்லைப் போட்டுக் கொன்று விட்டு போய் விட்டனர். இந்த கொடூரச் செயலில் ஈடுபட்ட 4 பேரை தற்போது போலீஸார் கைது செய்துள்ளனர்.

சிறுவர்களும்
இந்த நான்கு பேரில் 2 பேர் 17 வயதேயான சிறார்கள். வீரலட்சுமியை சீரழித்துக் கொலை செய்த செயலில் இவர்களுக்கும் முக்கியப் பங்கு இருந்திருப்பதாக போலீஸார் கூறியுள்ளனர். டெல்லி நிர்பயா கொலை வழக்கை மிஞ்சும் வகையில் இந்த சிறார்கள் நடந்து கொண்டுள்ளதாகவும் போலீஸார் கூறுகின்றனர்.

இதே வேலையாம்
இந்த 7 பேரும் கும்பலாகவே செயல்பட்டு வந்துள்ளனர். யாராவது பெண் சிக்கிவிட்டால் உடனே கண்ணுப் பொத்தைப் பகுதிக்கு கொண்டு வந்து விடுவார்களாம். தங்களது கும்பலைச் சேர்ந்தவர்களுக்குத் தகவல் கொடுத்து கும்பலாக பலாத்காரம் செய்து பின்னர் கொலை செய்வதுதான் இவர்களது வேலையாக இருந்துள்ளது.

பிச்சைக்காரிகள்
இவர்களிடம் சிக்கி கூடங்குளத்தைச் சேர்ந்த சில பிச்சைக்காரப் பெண்களும் பலியாகியுள்ளனராம். அவர்களும் கூட வயதான பிச்சைக்காகரப் பெண்கள்தானாம். அவர்களையும் இங்கு தூக்கி வந்து பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளதாக போலீஸார் கூறியுள்ளனர்.

எத்தனை பேர்?
இவர்களிடம் நடத்திய முதல் கட்ட விசாரணையில் வீரலட்சுமி உள்பட மொத்தம் 5 பெண்களை பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது. மற்ற நான்கு பேரின் உடல்களையும் போலீஸார் தேடி வருகின்றனர். வேறு யாரையும் இவர்கள் பலாத்காரம் செய்துள்ளனரா, வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளனரா என்பது குறித்தும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

3 பேருக்கு வலைவீச்சு
இந்தக் கும்பலைச் சேர்ந்த தலைமறைவாக உள்ள மற்ற 3 பேரையும் பிடிக்கும் முயற்சிகளை போலீஸார் முடுக்கி விட்டுள்ளனர். அவர்கள் விரைவில் சிக்குவார்கள் என்று போலீஸார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

மரண தண்டனை கூட குறைச்சல்தான்
சிறார்களின் இந்த கொடூரச் செயல் கன்னியாகுமரி மாவட்டத்தை அதிர வைத்துள்ளது. நிர்பயா குற்றவாளிகளுக்கு மரண தண்டனை மிக மிக குறைந்த தண்டனையே என்பதை உணர்த்துவது போல உள்ளது இந்த தொடரும் பலாத்கார படுகொலைகள்.












Click it and Unblock the Notifications