வேலூர்: நோய்வாய்ப்பட்ட பன்றி இறைச்சி சாப்பிட்ட 2 சிறுவர்கள் மரணம்
வேலூர்: வேலூரில் பன்றி இறைச்சி சாப்பிட்ட 2 சிறுவர்கள் மரணமடைந்த சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி சின்ன இளையநகரத்தை சேர்ந்தவர் சிவக்குமார். அவரது வீட்டில் அடிக்கடி பன்றி இறைச்சி வாங்கி சமைத்து சாப்பிடுவர். நேற்று முன்தினம் பன்றி இறைச்சியை சிவக்குமார் வாங்கி வந்தார்.
அதை அவரது வீட்டில் சமைத்தனர். பின்னர் கணவன் மனைவி மகன்கள் கதிர்வேல் ஆகியோர் ஒன்றாக அமர்ந்து ஆசை ஆசையாக சாப்பிட்டனர்.
இந்த நிலையில் சிறுவர்களான கதிர்வேல் மற்றும் கோகுலுக்கு திடீரென வாந்தி ஏற்பட்டது. ஆனால் சிவக்குமாருக்கும், அவரது மனைவிக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. 2 சிறுவர்களும் இரவு முழுவதும் வாந்தி எடுத்தனர்.
இதனால் உடல் நிலை மோசமாகவே குழந்தைகள் 2 பேரையும் சிவக்குமாரும் அவரது மனைவியும் வேலூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று கதிர்வேல் கோகுல் ஆகிய இருவரும் பரிதாபமாக இறந்தனர்.
இது குறித்து வாணியம்பாடி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் காமராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இதற்கிடையே இறந்த 2 சிறுவர்களின் உடலும் பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது. பிரேத பரிசோதனைக்கு பின்னரே சிறுவர்களின் சாவுக்கு என்ன காரணம் என்பது தெரியவரும்.
எனினும் பன்றி இறைச்சியை சிவக்குமார் யாரிடம் இருந்து வாங்கினார் என்றும் நோய் வாய்ப்பட்ட பன்றியை கூறுபோட்டு இறைச்சிக்கடைக்காரர் விற்றாரா என்பது குறித்தும் முதல்கட்டமாக போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். அதன்படி இறைச்சி விற்றவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications