சாத்தூர் அருகே பட்டாசு ஆலை விபத்து: 2 பேர் பலி -20 பேர் படுகாயம்
சாத்தூர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் உடல் கருகி பலியானார்கள். 20க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள சேர்வைக்காரன்பட்டியில் தனியார் பட்டாசு ஆலை உள்ளது. இங்கு சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் வேலைபார்த்து வருகின்றனர். இந்த ஆலையில் பட்டாசு தயாரிப்பதற்காக 79 அறைகள் உள்ளன.

சனிக்கிழமையான இன்று காலை பணியாளர்கள் அனைவரும் வழக்கம்போல் வேலைக்கு வந்தனர். அவர்கள் பட்டாசு தயாரிப்பில் ஆர்வமாக ஈடுபட்டனர். அப்போது சங்கு சங்கரம் பட்டாசுக்காக ஒரு அறையில் மணி மருந்து கலக்கும் பணியில் ஊழீயர்கள் ஈடுபட்டிருந்தாக கூறப்படுகிறது. மருந்து திணிக்கும் போது உராய்வு ஏற்பட்டதில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது.
இதனால் ஏற்பட்ட தீ பக்கத்து அறைகளுக்கும் பரவ அந்த பகுதியை கரும்புகை சூழ்ந்தது. பட்டாசுகள் வெடித்து சிதறின. அங்கு பணியில் இருந்த தொழிலாளர்கள் அலறியடித்து ஓடினர். விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் கண்ணகுரும்பன் பட்டியை சேர்ந்த ராதா கிருஷ்ணன் ,38, நக்கலமுத்தன்பட்டியை சேர்ந்த குருசாமி ,63 ஆகியோர் உடல் கருகி பலியானார்கள். 20க்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. ஏராளமான தொழிலாளர்களுக்கு தீக்காயம் அதிகமாக உள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, சாத்தூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் ஏராளமான பட்டாசு ஆலைகள் உள்ளன. அங்கு அடிக்கடி வெடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் முதலிப்பட்டியில் நிகழ்ந்த வெடி விபத்தில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications