For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கள்ளக்குறிச்சி அருகே பயங்கர விபத்து.. காரை ஏரியில் இழுத்து சென்ற பேருந்து.. பகீர் கிளப்பும் சிசிடிவி

Google Oneindia Tamil News

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே கார் மீது பேருந்து மோதி விபத்தில் இருவர் உயிரிழந்த நிலையில் அதுகுறித்து பதறவைக்கும் சிசிடிவி வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் புறவழிச் சாலையில் நேற்று சென்னையிலிருந்து சேலம் நோக்கி வாடகைக் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது.

இந்த காரில் தனியார் இசைக் கல்லூரியில் படித்து வந்த ஆஷிக் என்பவர் சென்று கொண்டிருந்தார். காரை ஓட்டுநர் முருகன் ஓட்டிச் சென்றார்.

சென்னை தலைமை செயலகத்தில் திடீரென பற்றி எரிந்த கார்.. புகை அதிக அளவில் வெளியேறியதால் பரபரப்பு சென்னை தலைமை செயலகத்தில் திடீரென பற்றி எரிந்த கார்.. புகை அதிக அளவில் வெளியேறியதால் பரபரப்பு

சேலத்திலிருந்து சென்னை

சேலத்திலிருந்து சென்னை

அப்போது சேலத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த போது அரசு பேருந்து ஒன்று கார் மீது பயங்கரமாக மோதியது. இதில் காரில் இருந்த ஆஷிக், முருகன் ஆகியோர் பலியாகிவிட்டனர். இந்த சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பதறவைக்கிறது.

இரு புறமும் வாகனங்கள்

இரு புறமும் வாகனங்கள்

அந்த காட்சிகளில் தேசிய நெடுஞ்சாலையில் இரு புறமும் வாகனங்கள் சென்று கொண்டிருக்கின்றன. அப்போது ஆஷிக் பயணித்த கார் வந்து கொண்டிருக்கிறது. எதிர் புறத்தில் வந்த அரசு பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து எதிர்புறத்தில் பாய்கிறது.

கார் மீது பயங்கர மோதல்

கார் மீது பயங்கர மோதல்

அப்போது ஆஷிக் வந்த கார் மீது பயங்கரமாக மோதியதில் அந்த காரை முன்பக்கமாக தள்ளிக் கொண்டே பேருந்து ஏரிக்குள் செல்கிறது. இதனால் அரசு பேருந்தில் பயணம் செய்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு இறங்கினர். இந்த சிசிடிவி காட்சிகளை பார்க்கும் போது நெஞ்சம் பதறுகிறது.

சின்னசேலம் போலீஸார்

சின்னசேலம் போலீஸார்

இதுகுறித்து சின்னசேலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

English summary
2 died after car and bus clashes each other in Chinnasalem. CCTV footages released.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X