அதிகாலையே அதிர்ச்சி.. சிதறிய உடல்கள்! கள்ளக்குறிச்சி அருகே கவிழ்ந்த ஆம்னி பேருந்து - 2 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
கள்ளக்குறிச்சி: சின்ன சேலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தார்கள்.
புதுச்சேரியில் இருந்து திருப்பூர் நோக்கி ஆம்னி பேருந்து ஒன்று தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டு இருந்தது. இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே இந்த பேருந்து சென்று கொண்டு இருந்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.

இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணித்த 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்கள். 20 க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்து உள்ளார்கள். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் காயம் அடைந்த பயணிகளை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications