உளுந்தூர்பேட்டையில் கார் டயர் வெடித்து விபத்து.. இருவர் பலி.. ஒருவர் படுகாயம்
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே கார் டயர் வெடித்து சாலையின் ஓரமாக இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த ஒருவர் சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னையில் இருந்து ஒரு கார் திருநெல்வேலிக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. காரை சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த முருகவேல் ஓட்டி சென்றார்.
அந்த காரில் சென்னை பெருங்களத்தூரை சேர்ந்த ஜோதிடர் சாய்பாலாஜி மற்றும் அவரது உறவினர் சென்னை தியாகராய நகரைச் சேர்ந்த மருத்துவர் சுந்தரராமன் ஆகியோர் பயணம் செய்தனர்.

உளுந்தூர்பேட்டை
இந்த கார் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஆசனூர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது காரின் முன்பக்க டயர் வெடித்து சிதறியது. இதனால் தாறுமாறாக தறிகெட்டு ஓடிய கார் சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது பயங்கரமாக மோதியது.

அப்பளம் போல் நொறுங்கிய கார்
இதில் காரின் முன்பகுதி முழுவதும் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் காரை ஓட்டிச் சென்ற முருகவேல், காரில் பயணம் செய்த ஜோதிடர் சாய்பாலாஜி ஆகிய இருவரும் உடல் நசுங்கி அதே இடத்திலேயே உயிரிழந்தனர்.

மருத்துவமனையில் சிகிச்சை
மேலும் காரில் பயணம் செய்த சுந்தரராமன் படுகாயம் அடைந்தார். விபத்து பற்றி தகவல் அறிந்த நெடுஞ்சாலை ரோந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸ் விசாரணை
காயமடைந்த சுந்தரராமன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து பற்றி தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications