இன்று முதல் காஞ்சிபுரத்துக்கு சென்னையில் 2 புதிய ரயில்கள்...

சென்னை கடற்கரை- தாம்பரம் இடையிலான இரண்டு மின்சார ரயில்களை தற்போது காஞ்சிபுரம் வரை நீட்டித்துள்ளனர். காலையும், மாலையும் இந்த சேவை காஞ்சிபுரத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
சென்னை கடற்கரையில் இருந்து அதிகாலை 5.40 மணிக்கு தாம்பரம் நோக்கி புறப்பட்டு செல்லும் மின்சார ரயில் (எண்: 40801) காலை 6.35 மணிக்கு தாம்பரம் வந்தடையும். இந்த ரயில் 09.12.2013 திங்கள்கிழமை முதல் காஞ்சிபுரம் வரை நீட்டிப்பு செய்யப்படுகிறது. அதன்படி, இந்த ரயில் தாம்பரத்தில் இருந்து காலை 6.35 மணிக்கு புறப்பட்டு காலை 8.20 மணிக்கு காஞ்சிபுரம் சென்றடைகிறது.
இதே போன்று சென்னை கடற்கரையில் இருந்து பிற்பகல் 3.25 மணிக்கு தாம்பரம் நோக்கி புறப்பட்டு செல்லும் மின்சார ரயில் (40803) மாலை 4.20 மணிக்கு தாம்பரம் சென்றடையும். இந்த ரயிலும் காஞ்சிபுரம் வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதால் தாம்பரத்தில் இருந்து மாலை 4.20 மணிக்கு புறப்பட்டு மாலை 6.15 மணிக்கு காஞ்சிபுரம் சென்றடையும்.
மறு மார்க்கத்தில், காலை 10.45 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும் தாம்பரம்- கடற்கரை மின் ரயில் (40802) திங்கள்கிழமை முதல், காஞ்சிபுரத்தில் இருந்து காலை 9 மணிக்கு புறப்பட்டு, காலை 10.45 மணிக்கு தாம்பரம் வந்தடையும். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு காலை 11.40 மணிக்கு சென்னை கடற்கரையை சென்றடையும்.
மேலும், தாம்பரத்தில் இருந்து இரவு 8.55 மணிக்கு புறப்படும் தாம்பரம்-கடற்கரை மின் ரயில் (40804) திங்கள்கிழமை முதல் காஞ்சிபுரத்தில் இருந்து இரவு 7.10 மணிக்குப் புறப்பட்டு, இரவு 8.55 மணிக்கு தாம்பரம் வந்தடையும். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு இரவு 9.50 மணிக்கு சென்னை கடற்கரையை சென்றடையும்.
இந்த ரயில்கள் செங்கல்பட்டு, பாலூர், வாலாஜாபாத் மற்றும் பழைய காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் நின்று செல்லும். ஞாயிற்றுக்கிழமைகளை தவிர்த்து அனைத்து வார நாள்களிலும் இயக்கப்படும்.
இன்று முதல் இந்த ரயில்வே சேவை தொடங்கியுள்ளது.












Click it and Unblock the Notifications