பயமுறுத்திய கணிதம்... தூக்கில் தொங்கிய பிளஸ்டூ மாணவி.. சென்னையில் பரிதாபம்
சென்னை: கணிதத் தேர்வு எழுத அஞ்சிய பிளஸ்டூ மாணவி தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை அடுத்த திரிசூலம் ராணி அண்ணா நகர், ஏரிக்கரை தெருவை சேர்ந்தவர் சங்கர். இவர், திரிசூலம் பகுதியில் உள்ள கல்குவாரியில் மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். இவருடைய மகள் ஏஞ்சல் இன்பராணி (17). இவர், புழுதிவாக்கம் தந்தை பெரியார் அரசு மேல் நிலைப்பள்ளியில் பிளஸ் டூ படித்து வந்தார்.

தற்போது வருடாந்திர பொதுத் தேர்வு நடந்து வருகிறது. நேற்று கணிதத் தேர்வு நடந்தது. கணிதத்தில் சற்று பலவீனமானவர் இன்பராணி. இதனால் பயந்து கொண்டே இருந்துள்ளார். நேற்று அதிகாலையில் படிக்க எழுந்துள்ளார். அறைக்குள் போன அவர் நீண்ட நேரமாகியும் வரவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு மாணவி இன்பராணி, தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்து வந்த குரோம்பேட்டை போலீசார், தற்கொலை செய்த மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தியபோது, இன்பராணியின் அண்ணன் இன்பராஜ், பிளஸ் டூ படித்த போது கணித பாடத்தில் தோல்வி அடைந்து விட்டார். இதனால் தானும் கணித பாடத்தில் தோல்வி அடைந்துவிடுவோமோ என்ற பயத்தில் மாணவி இன்பராணி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications