ஆம்பூர் அருகே பயங்கர விபத்து - கார் மீது டேங்கர் லாரி மோதியதில் 2 பேர் உயிரிழப்பு
ஆம்பூர் அருகே ஏற்பட்ட சாலைவிபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.
ஆம்பூர்: ஆம்பூர் அருகே டேங்கர் டேங்கர் லாரி மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் திருப்பதி ரேணி குண்டா சாலையை சேர்ந்தவர் முருகேசன், வயது 60. இவர், மனைவி கோகிலா மற்றும் ராஜலிங்கம் என்பவர் உள்பட 4 பேருடன் சேலம் மாவட்டம் வெங்கடகிரி பகுதியில் உள்ள கோவிலுக்கு காரில் சென்று விட்டு இன்று அதிகாலை திருப்பதிக்கு சென்று கொண்டிருந்தார்.

சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஆம்பூர் அடுத்துள்ள சின்ன கொமேஸ்வரம் என்ற பகுதியில் கார் சென்றபோது, முன்னாள் சென்ற டேங்கர் லாரியின் பின்புறம் கார் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் முருகேசன் சம்பவ இடத்தி லேயேயும், ஓட்டுனர் பிரேம் ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கொண்டுச் செல்லும் வழியிலேயேயும் உயிரிழந்தனர். ராஜலிங்கம் பலத்த காயங்களுடன் வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
லேசான காயங்களுடன் கோகிலா உட்பட 2 பேர் உயிர் தப்பினர். இந்த விபத்து குறித்து, ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications