சத்தியமங்கலம்: காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 2 பேர் பலி- ஒருவர் மாயம்
ஈரோடு: சத்தியமங்கலம் அருகே காட்டாற்று வெள்ளத்தில் தரைப்பாலத்தை பைக்கில் கடக்க முயன்ற போது அடித்து செல்லப்பட்ட 3 பேரில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் ஆறுகள், ஏரிகள், குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. சில இடங்களில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே கஸ்தூரி நகரில் உள்ள தரைப்பாலத்தில் 3 தொழிலாளர்கள் இரு சக்கர வாகனத்தில் கடக்க முயற்சித்துள்ளனர். அப்போது, வெள்ளத்தில் மூன்று பேரும் அடித்து செல்லப்பட்டுள்ளனர்.
இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் 3 பேரையும் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
அப்போது, 3 பேரில் வடபழனியை சேர்ந்த வினோத் மற்றும் சுரேந்திர பிரசாத் ஆகிய இருவரின் உடல்களை தீயணைப்புத் துறையினர் மீட்டுள்ளனர்.
வினோத் அந்த பகுதியில் உள்ள மளிகைக்கடையில் வேலைப்பார்த்து வந்துள்ளார் என்று கூறப்படுகிறது. வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட ஒருவரை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் பிரபாகரன் கூறும்போது, ''இரவு நேரத்தில் 3 பேரும் தரைப் பாலத்தை கடந்ததால் காற்றாட்டு வெள்ளத்தில் அவர்கள் அடித்து செல்லப்பட்டுள்ளனர். மேலும், இரவு நேரங்களில் மக்கள் வெள்ளப் பகுதியில் ஆற்றை கடக்க வேண்டாம்" என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications