சென்னை அருகே ரயில் மோதி 2 பேர் பலி - தண்டவாளத்தை கடக்கும் போது பரிதாபம்
சென்னை: சென்னை பெருங்களத்தூரில் மின்சார ரயில் மோதியதில் தண்டவாளத்தை கடக்க முயன்ற இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இவ்விபத்தில் மேலும் ஒருவர் படுகாயமடைந்தார். தண்டவாளத்தை கடக்கும் போது ரயில் மோதியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

படுகாயமடைந்தவர் குரோம்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர்கள் குறித்த தகவல்கள் தெரியவில்லை.
இவ்விபத்தால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கிட்டதட்ட பலமணி நேரங்களுக்குப் பின்னர் சேவை மீண்டும் துவங்கியது. இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் மின்சார ரயில்களில் அடிபட்டு இறப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரி்த்துக் கொண்டே இருக்கிறது. பெரும்பாலும் தண்டவாளங்களை கவனக்குறைவாக கடக்கும்போதுதான் இப்படிப்பட்ட விபத்துகள் நடக்கின்றன. அலுவலகம் செல்வோர்தான் பெரும்பாலும் இதில் இறக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
செல்போனை பேசிக் கொண்டே தண்டவாளத்தில் நடப்பது, கடப்பது, ரயில் வருகிறதா என்று கூடப் பார்க்காமல் அவசரமாக கடப்பது போன்றவைதான் இதுபோன்ற விபத்துகளுக்கு முக்கியக் காரணம். குறிப்பாக தாம்பரம் பகுதியில்தான் அதிக அளவில் விபத்துகள் நடக்கின்றன என்று ரயில்வே போலீஸார் கூறுகிறார்கள்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications