சென்னை ஐஐடி வளாக ஏரியில் குளிக்கச் சென்ற இருவர் பலி

சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஏரியில் குளிக்க சென்ற இருவர் பலியாகிவிட்டனர்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: அடையாற்றில் உள்ள ஐஐடி வளாகத்தில் உள்ள கானகம் ஏரியில் குளிக்கச் சென்ற இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துவிட்டனர்.

சென்னை அடையாற்றில் இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (ஐஐடி) உள்ளது. இந்த வளாகத்தின் பின்புறம் கானகம் ஏரி உள்ளது.

இந்த ஏரியில் குளிப்பதற்காக அதே பகுதியை சேர்ந்த 7 பேர் இன்று சென்றனர். அப்போது குளித்துவிட்டு 5 பேர் மட்டுமே வந்த நிலையில் மீதமுள்ள இருவரை காணாது நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

2 persons drown in lake which is in Chennai IIT campus

இதுகுறித்து தகவலறிந்த போலீஸார், தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு சென்றனர். அங்கு நீரில் மூழ்கி உயிரிழந்தது மூர்த்தி, ஜெரால்டு ஆகியோர் என்பது தெரியவந்தது.

அவர்களது உடல்களை மீட்க தீவிரம் காட்டி வருகின்றனர். இத்தனை பாதுகாப்பு மிக்க ஐஐடி வளாகத்தில் இவர்கள் எப்படி நுழைந்தார்கள் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+