புதுவை சிறையில் 2 விசாரணைக் கைதிகள் தற்கொலை முயற்சி - மருத்துவமனையில் அனுமதி

Subscribe to Oneindia Tamil

புதுவை : புதுச்சேரி காலாட்பேட் சிறையில் இரண்டு விசாரணைக் கைதிகள் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சிறைத்துறையினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

புதுச்சேரி மத்திய சிறையில் சிறுமி பாலியல் பலாத்கார வழக்கு தொடர்பாக புதுகுப்பத்தைச் சேர்ந்த கவினேஷ், சசிதரன் ஆகிய 2 பேர் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இன்று அதிகாலை தாங்கள் அணிந்திருந்த ஆடைகளை பயன்படுத்தி தூக்கிட்டு தற்கொலை செய்ய முயன்றுள்ளனர்.

இதனை பார்த்த சிறை வார்டன்கள் அவர்களை காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். கைதிகள் இருவரையும் புதுச்சேரி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஏற்கனவே இரண்டு விசாரணைக் கைதிகளும் கடும் மன உளைச்சலில் இருந்ததாகவும், அதனாலேயே இத்தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் சிறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+