திருப்பூரில் ஆசிரியையின் கன்னத்தில் பளார் விட்ட பள்ளி மாணவன்.. கண்டித்ததற்கு பதிலடி!
திருப்பூர்: திருப்பூரில் ஆசிரியையின் கன்னத்தில் பள்ளி மாணவன் அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அந்த மாணவன் பள்ளியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
திருப்பூர் வீரபாண்டி பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப்பள்ளியில் சுசீலா (52) என்ற ஆசிரியை பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இவர் பிளஸ்-2 வகுப்பில் வணிகவியல் பாடம் நடத்தி கொண்டு இருந்தார்.

அப்போது இந்த வகுப்பில் படித்த மாணவர் சூரிய பிரகாஷ் என்பவர் புத்தகம், நோட்டு கொண்டு வரவில்லையாம். இதனால் அவர் தனியாக ஒரு பேப்பரில் ஆசிரியர் சொல்வதை குறித்து கொண்டு இருந்தார்.
இதைப்பார்த்த ஆசிரியை சுசீலா அந்த மாணவரை அழைத்து கண்டித்ததோடு, திடீரென கன்னத்திலும் அறைந்து விட்டதாக கூறப்படுகிறது. மற்ற மாணவ-மாணவிகள் முன்பு தாக்கப்பட்டதால் ஆத்திரம் அடைந்த மாணவர், பதிலுக்கு ஆசிரியை சுசீலாவின் கன்னத்தில் பளார் என அறைந்துவிட்டாராம்.
மாணவன் அடித்ததில் ஆசிரியை சுசீலாவின் கண் கண்ணாடி உடைந்து அவருக்கு காயம் ஏற்பட்டது. இதை சற்றும் எதிர்பார்க்காத ஆசிரியை, வகுப்பறையில் நிகழ்ந்தது குறித்து தலைமை ஆசிரியரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார். இதன்பின்னர், கல்வித்துறை உயர் அதிகாரிகளின் அறிவுறுத்தலின் படி, ஆசிரியை கன்னத்தில் அறைந்த மாணவனுக்கு மாற்றுச் சான்றிதழ் கொடுத்து பள்ளியை விட்டு நீக்கி விட்டனர்.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications