சேலம்: ப்ளஸ் 2 மாணவனுக்கு வகுப்பறையில் கத்திக்குத்து
சேலம்: சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே அரசு மாதிரிப் பள்ளியில் 12ஆம் வகுப்பு மாணவனை வகுப்பறையில் கத்தியால் குத்திவிட்டு இருவர் தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே நடுப்பட்டி அரசு மாதிரி பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்த மாணவன் சந்தோஷ். இன்று காலை வழக்கமாக பள்ளிக்கு வந்து வகுப்பறைக்குள் அமர்ந்தார். அப்போது திடீரென வகுப்பறைக்குள் புகுந்த 2 பேர் மறைத்து எடுத்து வந்த கத்தியால் மாணவன் சந்தோஷை குத்தினர்.

உடனடியாக இருவரும் மோட்டார் சைக்கிளியில் தப்பியோடிவிட்டனர். காயமடைந்த சந்தோஷ் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த 20 நாட்களில் தமிழகத்தில் பள்ளி வகுப்பறைகளில் மூன்று மாணவர்கள் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். இதில் 2பேர் கொலை செய்யப்பட்டனர்.
கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் நிலக்கோட்டை அரசு கள்ளர் பள்ளியில் மாணவர்கள் சண்டை கொலையில் முடிந்தது. இதேபோல கடந்த இருதினங்களுக்கு முன்னர் அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடி அரசு பள்ளியில் சீனியர் மாணவனால் 8 ஆம் வகுப்பு மாணவன் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டான். அந்த பரபரப்பு அடங்குவதற்குள் தற்போது சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே ப்ளஸ் டூ மாணவன் கத்தியால் குத்தப்பட்டுள்ளான்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications