மதுரையில் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் கதவை உடைத்து 20 பவுன் நகை கொள்ளை
மதுரை : மதுரையில் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் கதவை உடைத்து 20 பவுன் நகை கொள்ளையடிக்கப் பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை பை-பாஸ் ரோட்டில் உள்ள நடராஜர் நகர் விருத்தாசல தெருவை சேர்ந்தவர் பார்த்திபன் (37). ரியல் எஸ்டேட் அதிபரான பார்த்திபன், மூணாறில் வீடு கட்டி வருகிறார். இந்த வீட்டின் கட்டுமான பணியை பார்வையிடுவதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு குடும்பத்துடன் மூணாறு புறப்பட்டுச் சென்றார் பார்த்திபன்.
பின்னர் மதுரை திரும்பிய பார்த்திபன், தனது வீட்டின் கதவு உடைக்கப் பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 20 பவுன் நகை மற்றும் ரூ. 20 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப் பட்டது தெரிய வந்தது.
இது தொடர்பாக உடனடியாக அவர் எஸ்.எஸ்.காலனி போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார் கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர்.
In Madurai, 20 sovereign of jewels were stolen from a real estate businessman's house.
செய்தி சுருக்கம் :
மதுரையில் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் கதவை உடைத்து மர்ம நபர்கள் 20 பவுன் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications