ரீசார்ஜ் செய்ய வந்த பெண்.. போனை வாங்கி "அதை" அனுப்பிய இளைஞர்.. இப்போ கம்பி எண்ணுகிறார் தம்பி!
பெண்ணுக்கு ஆபாச வீடியோக்களை அனுப்பிய இளைஞர் கைது செய்யப்பட்டார்
மயிலாடுதுறை: ரீசார்ஜ் செய்ய வந்த இளம்பெண்ணுக்கு எடுத்த எடுப்பிலேயே அசிங்க அசிங்கமான வீடியோக்களை செல்போனுக்கு அனுப்பிவிட்டார் முகமது அப்ரிடி.. இப்போது கம்பி எண்ணி கொண்டிருக்கிறார்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே கிளியனூர் அகரவல்லம் என்ற கிராமம் உள்ளது.. இங்கு வசித்து வந்தவர் முகமது அப்ரிடி.. 21 வயசுதான் ஆகிறது.

இவர் அதே பகுதியில் கடை வைத்து நடத்தி வருகிறார்.. இந்த கடையில் மணி டிரான்ஸ்பர் செய்து தரப்படுகிறது.. அதேபோல, செல்போன் ரீசார்ஜ்-ம் உள்ளது.. அதனால் அந்த பகுதி கிராம மக்கள் இவர் கடைக்குதான் பெரும்பாலும் செல்வது வழக்கம்.
அப்படித்தான் ஒரு இளம்பெண் ரீசார்ஜ் செய்ய போனார்.. நம்பர் என்ன என்று கேட்க, பெண்ணும் செல்போன் நம்பரை சொல்ல, அதை ஒரு நோட்டு புத்தகத்தில் குறித்து வைத்து கொண்டு ரீசார்ஜும் செய்துவிட்டார் அப்ரிடி.. அந்த பெண் சென்றுவிட்ட பிறகு கொஞ்ச நேரத்திற்கெல்லாம் மெசேஜ் ஒன்று வந்துள்ளது.. அது யார் என்று பார்த்தால் கடைக்காரர் அப்ரிடியேதான்.
முதலில் இதை அந்த பெண் கண்டுகொள்ளவே இல்லை.. ஆனால், மளமளவென வீடியோக்கள் வந்து விழுந்தன.. இதனால் அந்த வீடியோ என்ன என்று பார்த்தால், எல்லாமே பலான வீடியோக்கள்தான்.. பூராவும் ஆபாசம்.. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண், மாவட்ட எஸ்பி ஸ்ரீநாத்துக்கு வாட்ஸ்-அப் மூலம் புகார் தந்தார்.
இதையடுத்து, அந்த மெசேஜ் மூலம் வந்த புகாரின் அடிப்படையில் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.. பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து முகமது அப்ரிடியை போலீசார் கைது செய்து, அலேக்காக தூக்கி உள்ளே வைத்துவிட்டனர்
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications