வளைத்து வளைத்துப் பிடிக்கப்பட்ட ஓவர் கட்டண ஆம்னி பஸ்கள்.. 22 பஸ்களுக்கு நோட்டீஸ்
சென்னை: தீபாவளி கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி கூடுதல் கட்டணம் வசூலித்தது, பெர்மிட் இல்லாமல் இஷ்டத்திற்கு பஸ் ஓட்டியது, அரசுக்கு செலுத்த வேண்டிய வரியை செலுத்தாமல் டபாய்த்தது உள்ளிட்ட காரணங்களுக்காக 22 ஆம்னி பஸ்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
வருடா வருடம் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளின்போது இந்த ஆம்னி பஸ்கள் செய்யும் அட்டகாசம் தாங்க முடியாது. இஷ்டத்திற்கு கட்டணம் வசூலிப்பார்கள். பெர்மிட் இல்லாமல் ஏராளமான பஸ்களை சட்டவிரோதமாக ஓட்டி காசு பார்ப்பார்கள்.
இவர்களின் அட்டகாசம் கூடிக் கொண்டேதான் போகிறதே ஒழிய, குறைந்தபாடில்லை. கடந்த சில வருடங்களாகத்தான் தமிழக அரசு, அதிரடியாக பண்டிகைகக் காலங்களில் கூடுதல் சிறப்புப் பேருந்துகளை இயக்கி மக்களுக்கு நிம்மதியைக் கொடுத்து வருகிறது.
இந்த நிலையில், இந்த வருட தீபாவளிப் பண்டிகையின்போது ஆம்னி பஸ்களில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
எழும்பூர், கோயம்பேடு மற்றும் பெருங்களத்தூரில் சிறப்பு குழுக்கள் சோதனை செய்தது. அக்டோபர் 29-ந்தேதி முதல் நவம்பர் 1-ந்தேதி வரை நடந்த பரிசோதனையில் முறைகேடாக இயக்கும் ஆம்னி பஸ்கள் மீது பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதிக கட்டணம் வசூலித்த 22 ஆம்னி பஸ் உரிமையாளர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
நேற்று நடத்திய ஆய்வின் போது ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ஆம்னி பஸ் ஒன்று பர்மிட்டை மீறி சென்னையில் இயக்கப்பட்டது. அந்த பஸ்சை அதிகாரிகள் பறிமுதல் செய்து பஸ் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
மேலும் வரியை முறையாக செலுத்தாத ஆம்னி பஸ்களிடம் இருந்து ரூ.76,760 வரி நிலுவைத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை இணை ஆணையர் விஜயராஜ் தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கை தொடர வேண்டும். முடிந்தால் தினசரி கூட ஸ்பெஷல் டீம் போட்டு இவர்களை ஒடுக்க வேண்டும். அப்போதுதான் அதிக கட்டணம் வசூலிப்போரின் கொட்டம் அடங்கும் என்பது மக்களின் கருத்தாக உள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications