தேமுதிகவின் எறஞ்சி மாநாட்டுக்கு 24 கண்டிஷன்கள்... !
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்ப்பேட்டை அருகே எறஞ்சி என்ற இடத்தில் தேமுதிக நாளை நடத்தவுள்ள மாநாட்டுக்கு 24 நிபந்தனைகளைப் போட்டு அனுமதி கொடுத்துள்ளது காவல்துறை.
அந்த 24 நிபந்தனைகள் குறித்த விவரம் தற்போது தெரிய வந்துள்ளது. நீண்ட நாட்களாக மாநாட்டுக்கு அனுமதி தராமல் இழுத்தடித்து வந்த காவல்துறை நேற்று மதியம்தான் அனுமதி கொடுத்தது.. கூடவே 24 நிபந்தனைகளையும் விதித்து.
உளுந்தூர்ப்பேட்டை டி.எஸ்.பி போட்டுள்ள அந்த 24 நிபந்தனைகளில் முக்கியமான சில...

அது உங்கள் பொறுப்பு
உளுந்தூர்பேட்டை அருகே எறஞ்சி கிராமத்தில் மாநாடு நடத்த தீர்மானித்திருக்கும் இடமானது தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ளதால் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படாமல் பார்த்துக்கொள்வது உங்கள் பொறுப்பாகும்.

போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படக் கூடாது
இந்த மாநாட்டிற்கு திருச்சி-சென்னை, திருக்கோவிலூர், கள்ளக்குறிச்சி மார்க்கமிருந்து வரும் வாகனங்களை மாநாடு நடக்கும் இடத்தில் இருந்து தனித்தனியே போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாத வண்ணம் நிறுத்த இட வசதி ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

10 மணிக்குள் முடிச்சுக்கனும்
மேடைக்கான தகுதி சான்று பெற்றிருக்க வேண்டும். மாநாடு குறித்த நேரத்தில் தொடங்கி இரவு 10 மணிக்குள் முடித்துக்கொள்ள வேண்டும்.

ஒழுங்கா கலைஞ்சு போகனும்
மாநாடு தொடங்குவது முதல் மாநாடு முடிந்து அனைத்து தொண்டர்களும் கலைந்து செல்லும் வரை அவர்களை ஒழுங்கு செய்வதும், கட்டுக்குள் வைத்திருப்பதும் உங்கள் பொறுப்பு.

தட்டி வைக்கக் கூடாது... கொடி கட்டக் கூடாது
தேசிய நெடுஞ்சாலையில் விளம்பர தட்டிகள், பலகைகள், கொடிகள் தோரணம் கண்டிப்பாக அமைக்கக்கூடாது.

எந்தச் சேதாரமும் ஏற்படக் கூடாது
அரசு மற்றும் பொது சொத்துகளுக்கு எந்த வித சேதமோ அல்லது முறைகேடோ செய்யக்கூடாது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications