நெல்லை மாவட்டத்தில் 266 வாக்குச் சாவடிகளில் வெப் கேமரா பொருத்தி கண்காணிக்க முடிவு
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் 266 வாக்கு சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அங்கு வெப் கேமரா பொருத்தி கண்காணிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழக சட்டசபைக்கு தேர்தல் மே மாதம் 16ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் ஏப்ரல் 22ம் தேதி தொடங்குகிறது. இது 29ம் தேதி வரை நடக்கிறது. வாக்குப பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகிறது.

நெல்லை மாவட்டத்தில் 3931 வாக்கு சாவடிகள் உள்ளன. இந்த வாக்கு சாவடிகளில் போலீசார் மற்றும் வருவாய் துறையினர் இணைந்து பதற்றமான வாக்கு சாவடிகளின் பட்டியலை தயாரித்துள்ளனர்.
ஜாதி, மதம் ரீதியாக பதற்றம் நிறைந்தவை, கடந்த தேர்தலில் வாக்கு சதவீதம் அதிகமாக இருந்தவை, ஆள் மாறாட்டம், கள்ள ஓட்டு போடுதல் ஆகியவை நடந்த வாக்கு சாவடிகள் என்ற அடிப்படையில் பதற்றமான வாக்குசாவடிகள் பட்டியலை தயார் செய்துள்ளனர். இது தொடர்பாக தேர்தல் நடந்தும் அலுவலர்களுடன் நெல்லை ஆட்சியர் கருணாகரன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் அவர் கூறியதாவது, நெல்லை மாவட்டத்தில் 266 வாக்கு சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. இந்த வாக்கு சாவடிகளில் கூடுதலான பாதுகாப்பு ஏற்பாடுகள் வீடியோ பதிவு, வெப் கேமரா பதிவு, மைக்ரோ அப்சர்வர் நியமனம் உள்ளிட்டவற்றில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும். வாக்காளர்கள் எவ்வித தயக்கமும் இல்லாமல் வாக்களிக்க வரும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications