2ஜி வழக்கு... நாளை தயாளு அம்மாளிடம் கோபாலபுரம் இல்லத்தில் நீதிபதி விசாரணை

Subscribe to Oneindia Tamil

2g case: Chennai magistrate to record Dayalu Ammal's statement tomorrow
சென்னை: 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில், நாளை திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளிடம் அவரது கோபாலபுரம் இல்லத்தில் வைத்து சென்னை மாஜிஸ்திரேட் விசாரணை நடத்துகிறார்.

இந்த விசாரணையில் கனிமொழி, கலைஞர் டிவி முன்னாள் நிர்வாக இயக்குநர் சரத்குமார் ரெட்டி, ஆசிப் பல்வா, கரீம் மொரானி, முன்னாள் அமைச்சர் ராசாவின் வழக்கறிஞர் ஆகியோரும் நேரில் ஆஜராகிறார்கள்.

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க வேண்டும் என்று சி.பி.ஐ. கோர்ட் கடந்த மே மாதம் உத்தரவிட்டது. ஆனால் நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்கும் நிலையில் அவரது உடல்நிலை சீராக இல்லை. எனவே அவருக்கு நீதிமன் றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தயாளு அம்மாளின் மகள் செல்வி மனு செய்தார்.

மனுவை விசாரித்த நீதிபதிகள் தயாளு அம்மாள் உடல்நிலையை பரிசோதிக்க டெல்லி எய்ம்ஸ் மருத்துவ குழுவை அனுப்பி வைத்தனர். அந்த குழுவினர் தயாளு அம்மாள் உடல் நிலையை பரிசோதித்து விட்டு டெல்லிக்கு பயணம் செய்யும் நிலையில் அவரது உடல் நிலை தகுதியாக இல்லை என்று அறிக்கை அளித்தது.

இதையடுத்து எழும்பூர் பெருநகர குற்றவியல் நீதிமன்ற முதன்மை நீதிபதி தயாளு அம்மாள் வீட்டிற்கு நேரடியாக சென்று சாட்சியத்தை பதிவு செய்யும்படி சி.பி.ஐ. நீதிபதி ஓ.பி.சைனி உத்தரவிட்டார்.

இதையடுத்து வழக்கு ஆவணங்களும் சென்னை கோர்ட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதையடுத்து நாளை காலை 10 மணிக்கு, எழும்பூர் மாஜிஸ்திரேட் தயாளு அம்மாள் வீட்டுக்குச் சென்று அவரது சாட்சியத்தைப் பதிவு செய்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+