இரண்டாவது முறையாக ஜெ. சிறுதாவூர் பங்களாவில் தீ விபத்து!
இரண்டாவது முறையாக, ஜெயலலிதா தங்கிய சிறுதாவூர் பங்களாவில் தீ விபத்து நடந்துள்ள சம்பவம் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
காஞ்சிபுரம்: சிறுதாவூர் கிராமத்தில் ஜெயலலிதா தங்கி இருந்த பங்களாவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பினை உண்டாக்கியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் அருகில் உள்ள சிறுதாவூர் கிராமத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தங்கி ஓய்வெடுத்த பங்களா உள்ளது. இதில் பலமுறை அவர் தனது தோழி சசிகலாவுடன் தங்கி ஓய்வெடுத்துள்ளார்.

சிறுதாவூர் பங்களாவைச் சுற்றி சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் சவுக்குமரங்கள் மற்றும் வயல்வெளிகள் உள்ளன. இதன் நுழைவு வாயில் பழைய மாமல்லபுரம் சாலையில் ஆலத்தூரை அடுத்து உள்ளது. சுட்டெரிக்கும் கோடை வெயில் காரணமாக வயல்வெளிகள் காய்ந்துபோயுள்ளது.
இந்நிலையில், நேற்று பங்களாவில் உள்ள ஒரு பகுதியில் திடீரென தீப்பற்றியது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாகக் காட்சியளித்தது. காற்றின் வேகத்தில் தீ மளமளவென பரவி காய்ந்த புற்கள், செடி, கொடிகளில் பற்றி பயங்கரமாக எரிந்தது.
தீவிபத்து பற்றி சிறுசேரி, திருக்கழுக்குன்றம் தீயணைப்பு நிலையத்திலிருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். திருப்போரூர் பகுதி போலீசார் தீவிபத்து ஏற்பட்ட இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
கடந்த ஏப்ரல் மாதம் 19ம் தேதி இதே சிறுதாவூர் பங்களாவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது கவனிக்கத்தக்கது.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications