சென்னை அண்ணா பல்கலை. கழக விடுதியில் மாடியில் இருந்து கீழே குதித்து மாணவி தற்கொலை!
சென்னை: சென்னை அண்ணா பொறியியல் பல்கலைக் கழக விடுதியின் மாடியில் இருந்து மாணவி சண்முக ப்ரீத்தா கீழே குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் அருகே கள்ளக்குறிச்சியில் எஸ்.வி.எஸ். மருத்துவக் கல்லூரி மாணவிகள் 3 பேர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாணவிகள் தற்கொலை செய்து கொண்டதாக முதலில் கூறப்பட்டாலும் கல்லூரி நிர்வாகத்துக்கு எதிராக ஆட்சியரிடம் புகார் கூறியதால் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகம் கிளப்பப்படுகிறது.

இந்நிலையில் சென்னையில் உள்ள அண்ண பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த விடுதி மாணவி சண்முக பரீத்தா நேற்று தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த முத்தையாவின் மகளான சண்முக ப்ரீத்தா, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் செராமிக் பொறியியல் பிரிவில் பி.டெக் 2-ம் ஆண்டு பயின்று வந்தார். விடுதியின் மாடிக்கு நேற்று இரவு சென்ற ப்ரீத்தா அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைதொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மாணவி சண்முக ப்ரீத்தாவின் உடலைக் கைப்பற்றி அடையாறில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சண்முக ப்ரீத்தாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக கூறி இருக்கின்றனர்.
இந்த தற்கொலை குறித்து கோட்டூர்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications