ஹவலா பணத்தை 'ஸ்கெட்ச் போட்டு' கொள்ளையடித்த பலே கரூர் போலீசார்.... இன்ஸ்பெக்டர் கைதால் பரபரப்பு!
கோவை: கோவை மதுக்கரை அருகே ரூ4 கோடி பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் கரூர் இன்ஸ்பெக்டர் உட்பட 3 போலீசார் சிக்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மதுக்கரை அருகே கேரளாவை சேர்ந்த நகைக்கடை ஊழியர் ஒருவரின் ரூ4 கோடி பணத்தை போலீசார் உடையில் வந்த 3 பேர் கொள்ளையடித்ததாக முதலில் தகவல்கள் வெளியாகின. பின்னர் நகைக் கடை ஊழியரின் ஆடம்பர கார் மட்டுமே கொள்ளையடிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
தற்போது இந்த கொள்ளை சம்பவத்தில் போலீஸ் கும்பல்தான் ஈடுபட்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. கரூரில் தொழிற்சாலை காவலாளி ஒருவரை மிரட்டி பணம் கேட்டதாக ஒரு புகார் வந்தது.

பெங்களூர் போன்
இந்த புகார் குறித்து விசாரிக்க கரூர் பரமத்தி இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், சப் இன்ஸ்பெக்டர் சரவணன், ஹெட் கான்ஸ்டபிள் தர்மேந்திரா ஆகியோர் உடுமலைப்பேட்டையில் முகாமிட்டிருந்தனர். அப்போது இன்ஸ்பெக்டர் முத்துக்குமாருக்கு பெங்களூருவில் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.

மதுக்கரையில் மடக்கிய போலீஸ்
அதில் ரூ4 கோடி ஹவாலா பணத்துடன் ஒருவர் வந்து கொண்டிருக்கிறார்... அவரை மதுக்கரை அருகே நீங்கள் மடக்கி கைது செய்யலாம் என துப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மதுக்கரை அருகே துப்பு கொடுத்த ஆசாமி கொடுத்த தகவல்களை வைத்து கேரளாவை சேர்ந்த நபரை இந்த போலீஸ் கும்பல் வழிமறித்துள்ளது.

தப்பிய கரூர் போலீஸ்
அவரிடம் இருந்த ரூ4 கோடி பணத்தை போலீஸ் கும்பல் கொள்ளையடித்துவிட்டு கரூருக்கு தப்பி வந்துள்ளது. கொள்ளை போனது ஹவாலா பணம் என்பதால் கேரளா நபர் போலீசில் அதை மறைத்து ஆடம்பர கார் மட்டுமே கொள்ளை போனதாக கூறியிருக்கிறார்.

தொடர்பு அம்பலம்
இது தொடர்பாக மதுக்கரை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். அப்போதுதான் இக்கொள்ளையில் கரூர் போலீஸ் கும்பலுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இன்ஸ்பெக்டர் கைது
இத்தகவல் கிடைத்தவுடன் போலீஸ் கும்பல் உடனே தலைமறைவானது. இதில் திண்டுக்கல் மாவட்டத்தில் தலைமறைவாக இருந்த இன்ஸ்பெக்டர் முத்துக்குமாரை மதுக்கரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். தலைமறைவான சரவணன் மற்றும் தர்மேந்திராவை தற்போது போலீசார் தேடி வருகின்றனர். ரூ4 கோடி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட போலீசார் கூண்டோடு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
-
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications