'புல் மப்பில்' ஓட்டுப் பதிவு எந்திரங்களுக்கு 'பாதுகாப்பு' வழங்கிய 2 சப்-இன்ஸ்பெக்டர்கள், ஒரு ஏட்டையா
சென்னை: சென்னையில் ஓட்டு எண்ணும் மையத்தில் மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களுக்கு பாதுகாப்பு வழங்கும் பணியில் இருந்த இரு 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் ஒரு ஏட்டையா ஆகியோர் கடும் போதையில் இருந்தனர். இதையடுத்து இந்த மூவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதியின் மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள், அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

இங்கு காவல் பணியில் இருந்த போலீசார் போதையில் இருப்பதாக புகார்கள் வந்தன. கடந்த வாரம் போதையில் இருந்த ஒரு சப்- இன்ஸ்பெக்டர் உள்பட 3 போலீசார், அங்கிருந்து மாற்றப்பட்டனர். அவர்கள் கடுமையாக எச்சரிக்கப்பட்டதோடு லேசில் விட்டுவிட்டனர் அதிகாரிகள்.
இந் நிலையில் நேற்று இரவும் இங்கு சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜா, ராதாகிருஷ்ணன் ஆகியோரும் ஏட்டு புருஷோத்தமனும் போதையில் இருந்தபடி எந்திரங்களுக்கு 'பாதுகாப்பு' அளித்துக் கொண்டிருந்தனர்.
இங்கு திடீரென ஆய்வுக்கு வந்த அதிகாரிகளிடம் மூவரும் மாட்டினர். ஐயா, வணக்கககங்ய்யா...யா..யா.. என குழறிய மூவரையும் அதிகாரிகள் மோந்து பார்த்தபோது அவர்கள் கடும் போதையில் இருப்பது உறுதியானது. இதையடுத்து அடையாறு துணை போலீஸ் கமிஷனர் கண்ணன் அவர்களளிடம் விசாரணை நடத்தினார்.
பின்னர் மூன்று பேரையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
வெளங்கும்...!
-
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்











Click it and Unblock the Notifications